ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை விமான நிலைய கார்கோ பிரிவில் மனித உடல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககத்தில் விமான நிலைய தனியார் பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் உடல் அழுகிய கிடந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பழைய விமான நிலையத்தின் அருகே தனியார் விமான நிறுவனத்தின் சரக்குப்பிரிவு உள்ளது. இங்கு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இந்த பகுதியில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசியது. உடனே பாதுகாப்பு ஊழியர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு பாதுகாப்பு ஊழியர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது பற்றி உடனே விமான நிலைய காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. மீனம்பாக்கம் உதவி ஆணையர் கண்ணபிரான், ஆய்வாளர் ஆரோக்கிய ரவீந்திரன் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கடந்த 20-ந் தேதி பாதுகாப்பு பணிக்கு சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த சாத்தையா (வயது75) என்பவர் வந்ததாகவும், அதன் பிறகு பணியை மாற்ற யாரும் வரவில்லை என்றும் தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. விமான நிலைய காவல்துறையினர் உடலை  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக