புட்டபர்த்தி சாய் பாபா மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா தனது கட்சி சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்து சமய ஆன்மீகக் குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.
இந்துசமய ஆன்மீகவாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபா மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீகவாதியாக மட்டுமல்லாது சமூக சேவகராகவும் சாய்பாபா திகழ்ந்தார். அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் வழங்கி பெரும் சேவையாற்றினார்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க சாய்பாபா பெரும் முயற்சி மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து சுமார் 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் குடிநீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் உதவியையும் ஏற்க மறுத்தார்.
கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக