ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்துல் கலாம் – இந்தியாவின் பெருமிதம்


  • காந்தியிடம் உதவியாளராக இருந்த கல்யாணராமன் என்கிறவரிடம், ‘காந்தி அளவுக்குப் பண்புகள் நிறைந்த ஒரு மனிதர் அவருக்குப் பிறகு இந்தியாவில் தோன்றவே இல்லையே?’ என்று கேட்ட போது, “ஏன் இல்லை? கலாம் இருக்கிறாரே..’ என்றாராம்!
  • கலாமின் உறவினர்கள் சிலர் வந்து ராஷ்ட்ரபதி பவனில் தங்கி டெல்லியை சுற்றிப் பார்த்த போது, அவர்களின் தங்கும் செலவு, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்காக இரண்டு லட்ச ரூபாய் சொந்தப் பணத்தைக் கட்டினாராம் கலாம்
  • அமெரிக்க ஜனாதிபதி  இந்தியா வந்த போது அவரது உதவியாளர்கள் வந்து ராஷ்ட்ரபதி பவனை சுற்றிப் பார்த்தார்களாம். அங்கிருந்த கார்ப்பெட்கள் ரிச்சாக இல்லையென்று மாற்றச் சொன்னார்களாம். அமெரிக்காவிலிருந்து இரண்டாயிரம் பாதுகாப்பு ஊழியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட வேண்டும் என்றார்களாம். அதை அன்போடு மறுத்து ரீகனையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாராம் கலாம். கலாம் அவர்கள் சொன்ன காரணங்கள் :
  • இந்த நாட்டின் பல மூத்த தலைவர்களின் காலடிகள் பட்ட அந்த கார்ப்பெட்களை மாற்றுவதில் எனக்கு சம்மதமில்லை
  • இந்த நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களை எங்கள் உயிரைக் கொடுத்தாவது நாங்கள் காப்பாற்றுவோம். வேறு பாதுகாப்பு ஊழியர்கள் அவசியமில்லை.
  • ராமேஸ்வரத்தில் இஸ்லாமியர்களின் தொழுகைத் தலத்துக்கு தலைமைப் பொருப்பில் இருந்த கலாம் அவர்களின் தகப்பனார், சர்ச்சின் தலைமைப் பாதிரியார், ஒரு வைணவ அர்ச்சகர் ஆகிய மூவரும் வெள்ளிக்கிழமை தோரும் கலாம் அவர்களின் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து நன்றாக இருந்து கொண்டிருக்கும் மத நல்லிணக்கத்தை எவ்வாறெல்லாம் கட்டிக் காக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவார்களாம்.
  • பரிசுப் பொருட்கள் எதையுமே பெற்றுக் கொள்ள மாட்டாராம். காரணம் அவர் சிறுவனாக இருந்த போது அவரது தகப்பனார் குர் ஆனிலிருந்து எடுத்துக் காட்டிய ஒரு வாசகம் :
  • கடவுள் உனக்கு ஒரு பொருப்பையும், பதவியையும் தரும் போது அதை செவ்வனே நடத்திப் போவதற்குரிய பொருளையும் எப்படியாவது தருவார். இதர வழிகளில் வரும் செல்வத்தை ஏற்காதே என்பதே அது
  • வட மாநிலத்தில் ஒரு பள்ளியில் குழந்தைகளிடம் ‘சந்தோஷமான வாழ்க்கைக்கு தடையாக இருப்பது எது?’ என்று கேட்ட போது பல குழந்தைகள் பலவாறாக பதில் சொன்னார்களாம். ஸ்னேகா என்கிற குழந்தை ‘வறுமையும், நோயும்’ என்று சொன்னதாம். அதைப் பாராட்டி தன் நூல் ஒன்றை அந்த ஸ்னேகாவுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார் கலாம் அவர்கள்
  • வெளியில் தெரியாமல் பல குழந்தைகள் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார்
  • அடுத்த முறையும் அவரை குடியரசுத் தலைவராக இருக்கச் சொல்லி 85 சதவீதம் பேர் ஆதரவளித்தும் அதை அவர் ஏற்கவில்லை. அவர் சொன்ன காரணம் ‘போதும்’

‘என் இந்தியக் கலாம்’
‘என் தமிழ்நாட்டுக் கலாம்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக