என் கால்கள் ஓடி விளையாடிய இந்த திருவாரூர் மண்ணுக்கு மறுபடியும் வர, என் உடல் ஒத்துழைப்பு கொடுக்குமோ கொடுக்காதோ... ஆனால், இங்கே வரும்போது மட்டும்தான் என் மனம் நிறைவுகொள்கிறது!’ - ஐந்தாவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்ற கருணாநிதி, இந்த ஆட்சியின் தொடக்கக் காலத்தில் காட்டூரில் உள்ள அஞ்சுகத்தம்மாள் நினைவு இல்லத்துக்கு வந்தபோது, சொன்ன வார்த்தைகள் இவை. இப்போது ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் அமர, கருணாநிதி முன்கூட்டியே தன் தாயின் நினைவிடம் போய் நிற்கிறார்!
அய்யாவுக்கு அம்மா மேல அன்பு இருந்தாலும் அய்யா கட்சிக்காரங்களுக்கு அம்மான்னா யம்மா தான்...
திருவாரூர் நண்பர்களையும் உற்ற உறவுகளையும் கசிந்த கண்களோடு பார்த்துவிட்டுப் பேச்சைத் தொடங்கினார் கருணாநிதி. ''எந்த மண்ணில் என் தோழர்களோடு விளையாடிக் களித்தேனோ, எந்த மண்ணில் என் நண்பர்களோடு படித்தேனோ, எந்த மண்ணில் இருந்து என் அரசியல் பயணத்தைத் தொடங்கினேனோ... அந்த மண்ணில் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறேன்.
மண்ணை பற்றி அதிகம் பெசறாரே.. மணல் கொள்ளையை தடுப்பாரா?
இதில் எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி. வேறு வழியின்றி நான் இங்கே போட்டியிடுகிறேன் என்று சொல்ல மாட்டேன்.
நீங்க உண்மைலயே தில் உள்ளவர்னா சென்னைல போட்டி இட்டிருக்கனும்.. இந்த ஒரு விஷயத்துல மட்டும் நீங்களும் ,ஜெவும் ஒரே மாதிரி.. பூர்வீக இடத்துல போட்டி இடறீங்க...
எனக்கே ஏற்பட்ட ஆசையின் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். பல இடங்களில் நான் வெற்றி பெற்று இருந்தாலும், 'உன் சொந்த மண்ணில் வீரத்தைக் காட்ட ஆற்றல் உண்டா?’ என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சம் எனக்கு உண்டு. அதனால்தான், திருவாரூரில் போட்டியிடுகிறேன்.
சென்னையில் போட்டி இட்டா படு கேவலமாக தோற்றுவிடுவேனோ என்ற அச்சம் உண்டு # மனசாட்சி
1957-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினேன். ஆனால், தனித் தொகுதிஆக்கி என்னைத் தடுத்துவிட்டார்கள். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது!''
வாய்ப்பா? ஏய்ப்பா?
''இந்தத் தேர்தலில், 'எனக்கு வாக்களியுங்கள்; எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ எனக் கேட்பேனே தவிர, 'யாருக்கு வாக்களிக்கக் கூடாது’ என்றெல்லாம் பேச மாட்டேன்.
படத்துல எழுதற வசனம் தான் புரியலைன்னா மேடைல பேசற வசனமுமா?
ஏனென்றால், திருவாரூரில் இருக்கும் அனைவரும் எனது சொந்தக்காரர்கள். அரசியலில் நான் அங்குலம் அங்குலமாக உயர்ந்ததற்குக் காரணமாக இருந்தவர்கள். நான் அவர்கள் மீது எதிர்ப்புக் கணைகளை வீசி, ஒரு லேசான காயத்தைக்கூட ஏற்படுத்த விரும்பவில்லை. தப்பித் தவறி, அப்படி ஒரு சிராய்ப்பை உங்கள் இருதயத்தில் ஏற்படுத்தினேன் என்றால், அதற்காக மன்னித்துவிடுங்கள்!'' என முதல்வர் பேசப் பேச, 'ஓர் அரசியல் தலைவனின் பக்குவம் இப்படி அல்லவா இருக்க வேண்டும்’ என அசந்துபோனார்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்.
தமிழன் பேசிப்பேசியே வீணாப்போனான்..... பேச்சை கேட்டு கேட்டும் மதி மயங்கிப்போனான்..
மறுநாள் காலை கருணாநிதி, காட்டூரில் உள்ள தன் தாயார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப் போனார். குடும்ப உறவுகள் பலரும் சூழ்ந்திருக்க, தாயின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி, சில கணம் அமைதியாக நின்றார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் கிளம்பி வந்து, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அடிக்கடி திருவாரூருக்கு வந்துபோகும் வழக்கமுடைய அழகிரி, அங்கே இருந்த நண்பர்களிடம், ''என்னய்யா, தலைவரை 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வெச்சிடுவீங்களா?'' எனக் கேட்டு உற்சாகமாக உரையாடியபடி இருந்தார்.
ஓட்டுக்கு ரூ 5000 தர்றீங்க.. அந்த ஓட்டு வித்தியாசம் கூட இல்லைன்னா கொடுத்த காசுக்கு என்ன மரியாதை?
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழநிமாணிக்கம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணன், நாகை மாவட்டச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், பால் வளத் துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு, முதல்வரை ஜெயிக்கவைக்க இரவும் பகலுமாக இயங்கி வருகிறது. இதற்குஇடையில், கருணாநிதியின் வெற்றிக்கு அணை போடும்விதமாக அ.தி.மு.க. தரப்பு கிராமங்கள் தோறும் சாதிரீதியான கூட்டங்களை ரகசிய மாக நடத்தி வருகிறதாம்.
ஐவர் குழுவோட வேலை என்ன? பண பட்டுவாடாவா?
அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முக்குலத்து வேட்பா ளரான 'குடவாசல்’ ராஜேந்திரன் இரவு பகல் பாராமல் திருவாரூர் தெருக்களைச் சுற்றி வருகிறார். ''இதுவரை தோல்வின்னா என்னன்னே தெரியாத கருணாநிதிக்கு, நம்ம சமுதாயம்தான் சரியான அடி கொடுக்கணும்.
எப்படி? நீங்க ஓட்டுக்கு ரூ 10000 தரப்போறீங்களா? போங்க தம்பி போங்க..
திருவாரூரில் கருணாநிதியை வீழ்த்துவதன் மூலமா நம்ம சமுதாயத்துக்கே பெரிய பெயரைத் தேடிக்க முடியும். வரலாற்று வாய்ப்பாகக் கிடைச்சிருக்கும் இந்தத் தேர்தலை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!'' என குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவான முக்குலத்துப் பிரமுகர்கள் கிராமங்கள்தோறும் இரவுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஏம்ப்பா டைம் வேஸ்ட் பண்றீங்க?உண்மைலயே அம்மாவுக்கு தில் இருந்தா இந்த தொகுதில நிக்க வேண்டியதுதானே..? அதென்ன ரகசியம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதாம சேஃப்டியா டம்மி வேட்பாளர் இருக்கற ஏரியாவுல போட்டி இடறது...
இதுவரை கருணாநிதி பெற்ற வெற்றி வித்தியாசத்தைக் காட்டிலும், அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அவரை ஜெயிக்கவைக்க தி.மு.க. ஆதரவுப் பிரபலங்கள் அனைவருமே திருவாரூரில் டென்ட் அடித்துவிட் டார்கள். அன்பளிப்பு மேளாவும் ஆங்காங்கே களை கட்டுகிறது. முதல்வரின் தொகுதி என்பதால், திக்குமுக்காடிக் கிடக்கிறது திருவாரூர்!
ஏம்ப்பா.. தேர்தல் கமிஷன்.. முதல்ல வி ஐ பிங்க நிக்கற தொகுதில பணப்பட்டுவாடா நடக்கறதை கண்காணிங்க... முக்கியமா ஏப்ரல் 11.. அன்னைக்குத்தான் பண பட்டுவாடா நடக்குதாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக