ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயுதபூஜை ?

உலகிலேயே அதிக அளவில் போர் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. உலகம் முழுவதும் நடைபெறும் மொத்த ஆயுத விற்பனையில் 9 சதவீதம் இந்தியாவுக்குத்தான் வருகின்றன. ஆண்டாண்டு காலமாக முதலிடத்தில் இருந்த சீனா, இந்த விஷயத்தில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


ஆயுத இறக்குமதியில் இந்த அளவுக்கு இந்தியா தீவிரமாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. கடந்த 1992ம் ஆண்டுக்குப் பிறகு, சோவியத் யூனியன் தனித் தனி நாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, இந்தியாவின் ஆயுதக் கொள்முதல் பெரிதும் குறைந்துவிட்டது. அணுகுண்டு சோதனை நடத்தியதால், இந்தியாவுக்கு ஆயுதம் விற்பனை செய்ய எந்த நாடும் முன்வரவில்லை. 1990ம் ஆண்டில் தொடங்கி 2009 வரை பெரிய அளவில் ஆயுதங்களை இந்தியா வாங்கவில்லை. 

அந்த நேரத்தில் பாகிஸ்தானும், சீனாவும் நவீன போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அவாக்ஸ் உள்ளிட்ட கண்காணிப்பு விமானங்கள் என வாங்கிக் குவித்தன. அப்போது வாங்க முடியாத, வாங்கமால் விட்ட ஆயுதங்களையும் போர் தளவாடங்களையும்தான் இப்போது வாங்கிக் குவிக்கிறது இந்தியா. அப்போது ரஷ்யாவிடம் மட்டும்தான் ஆயுதம் வாங்குவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. 

ரஷ்யா மட்டுமின்றி, இந்தியாவுக்கு ஆயுதம் விற்க, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என அனைத்து நாடுகளும் வரிசை கட்டி நிற்கின்றன. காரணம், ராணுவத்துக்கு இந்தியா ஒதுக்கும் மிகப் பெரிய தொகை. வரும் ஆண்டில் ராணுவத்துக்கான ஒதுக்கீடு ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர ஆயுதங்களுக்கான தேவையில் 70 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்படுவதால், போட்டி போட்டு ஆயுதங்களை விற்பனை செய்ய இந்த நாடுகள் தயாராக உள்ளன. 2006 முதல் 2010ம் ஆண்டு வரை அதிக அளவில் ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

போர் விமானங்களுக்கும் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கும் பல ஆயிரம் கோடி டாலர்களை இந்தியா செலவிடுகிறது. சிறப்பான பொருளாதார வளர்ச்சி, அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக உலக அளவில் முக்கிய இடத்தைப் பிடிக்க விரும்புகிறது. அதற்கு பலம் முக்கியம். பலத்தை முடிவு செய்வது நவீன ஆயுதங்கள்தான். இந்தியாவின் ஆயுத ஆசைக்கு இதுதான் காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக