வரும் 2011 தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், புரட்சித் தலைவி தலமையில், புரட்சி கலைஞர் உடன் வலுவான(?!) புரட்சிகர கூட்டணி அமைத்திருக்கும் கம்யுனிஸ்ட் தோழர்கள் இந்த முறை புரட்சியோ புரட்சி என சட்டமன்றதில் புரட்சி செய்துவிடுவார்கள் போலிருக்கிறது.
இந்த முறை அதிமுக தலமையில் தோழர்கள் அம்மா, விசயகாந்த் இரண்டு ஈகோகளுடன் கூட்டணி அமைத்துள்ளனர் ( சீட்டு பிரச்சனை இந்த பதிவு எழுதும் போதும் தொடர்வதால் அடக்கியே வாசிக்கிறேன்).
தேசிய கட்சி என்றாலே மாநில கட்சியின் முதுகில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற இலக்கணத்தை தோழர்கள் கூட கடைப்பிடிப்பது என்ன லாஜிக் என்று தெரியவில்லை? போதிய சீட்டு கிடைக்காத்தால் எங்கு நாடாளுமன்றதிலே சீ சட்டமன்றதிலே புரட்சி செய்ய முடியாமல் போய்விடுமோ என கலக்கத்தில் தோழர்கள் மார்க்ஸியம், ஏகாதிபத்தியம் என புலம்ப தொடங்கியுள்ள்னர்.
ஏகாதிபத்திய காங்கிரஸை ஒழிக்க அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் இவர்கள் லாஜிக்கை வலு சேர்க்க தமிழ்நாட்டின் ஒரே தமிழன், ஈழ புலி தம்பி சீமான் காங்கிரஸை பழி வாங்கி தமிழ் நாட்டில் தோற்கடித்து, காங்கிரஸையே அழித்துவிடும் எண்ணத்தில் இவர்கள் கூட்டணியில் தான் விளாசிக்கொண்டிருக்கிறார்.
அதென்னமோ எனக்கு புரியவேயில்லை, புலிகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தை இன்ஸ்டண்ட் ஈழ தாயும், காங்கிரஸின் அமெரிக்க அடிவருடி தனியர்மைய கொள்கைகளுக்கு கொஞ்சமும் மாற்று கொள்கை இல்லாதா புரட்சி தலைவி இவர்கள் கண்களுக்கு மட்டும் காங்கிரஸ் அரக்க்னை அழிக்க வந்த துர்கையாக தெரிவது?
விசயகாந்த் பாருங்கள் இவர் புரட்சி கலைஞர் என்ற பட்டம் வாங்கியதற்காகவே பெரியார் படத்திற்க்கு தேங்காய் உடைத்து ஊதுவத்தி ஏற்றி, தேசிய திரவிட அளவில் புரட்சி செய்த்வர். இவர் கொள்கை என்ன வென்றே இன்னும் தெரியவில்லை “அஹன் நான் சொன்னா நீங்க காப்பியடிச்சிடுவீங்க” என்று டபாய்த்துக்கொண்டிருக்கிறார், அதையே உறுதி படுத்திக்கொள்ளாமால் தோழர்கள் பல்லாக்கு தூக்க தயாராகிவிட்டனர்
.நாளை ஒரு வேளை கார்ல் மார்க்ஸ் படத்திற்க்கும் ஊதுவத்தி ஏற்றி நம் புரட்சி கலைஞர் தேங்காய் உடைப்பார், சில்லுகளை பொறுக்கி தின்னலாம் என்பதற்க்காக இருக்கும்.
அம்மா இப்போதே வேலையை காட்ட தொடங்கிவிட்டார் இனி காங்கிரஸ் த்ன் கூட்டணிக்கு வராது என்பதை உறுதியானாதால், பெறும்பாலான சீட்களில் அதிமுகவே நிற்க வேண்டும் என கணக்கு போடுகிறார் போலிருக்கிறது.சுழற்ச்சி முறை என்று வந்தால் த்மிழ் நாடு காலி ஏற்கனவே திமுக அரசு டாஸ்மாக்கிற்கு சசிகலாவின் மிடாஸில் இருந்து தான் சரக்கை வாங்குகிறது.மக்களுக்கு தெரியாத்தல்ல..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக