ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ்நாட்டை விற்றுவிடுவார்களா இவர்கள்




தி.மு.க.,  மற்றும் அ.தி.முக.வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் மீண்டும் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை, அவர்களது கட்சிக்காரர்கள் வேண்டுமானால் ஆரவாரமாக கை தட்டி வரவேற்கலாம். ஆனால், மாநில முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கும் நடுநிலையாளர்களை,  இவர்களின் தேர்தல் அறிக்கை இலவசங்கள், ரொம்பவே வேதனைப்படுத்தியுள்ளது. 
 
கடந்த ‌ ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்  தி.மு.க வின் சாதனைகள் தான் என்ன?  இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் நிலைதான் என்ன? இதன் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என சிந்திப்பதை விடுத்து ஒர் தேர்தல் அறிக்கையை வாசித்தார் முதல்வர்.  அதில் பல இலவச திட்டங்கள்.

மாநிலத்தில் உள்ள, 19 லட்சம் பரம ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு.

இந்த இலவச அரிசித் திட்ட அறிக்கையை முதல்வர் வாசித்ததும், கட்சிக்காரர்கள் அனைவரும், ஆர்ப்பரித்து, கைதட்டி வரவேற்றனர். தான் ஆறாவது முறையாக முதல்வராக வரப்போகும் நிலையிலும், தமிழகத்தில் 19 லட்சம் ஏழை, அதுவும் பரம ஏழைக் குடும்பங்கள் இருப்பது, ரத்தக் கண்ணீரை வர வழைக்கிறது என, அந்த அறிக்கையோடு சேர்த்து, முதல்வர் கூறியிருக்கலாம். 

பரம ஏழைக் குடும்பங்களுக்கு, வெறும் அரிசி மட்டும் வழங்கினால் போதுமா? அதைவிடுத்து, அக்குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்திருக்கலாமே! 

இன்று, மாவட்டச் செயலர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக உள்ளது, முதல்வருக்கு தெரியாமல் இல்லை. பரம ஏழைக் கிராமங்களை, தி.மு.க தலைவர்கள் தத்தெடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபடுவோம் என அறிவித்திருந்தால்,  மக்கள் அனைவரும் வரவேற்றிருப்பர். 

அதைவிடுத்து, 35 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்பது , கிரைன்டர் அல்லது மிக்ஸி இலவசமாக கொடுப்பது என்பது எல்லாம், "பரம ஏழைகளே... பரவிக் கொண்டே இருங்கள்' என்பது போல் உள்ளது. "ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் பங்காளி' எனச் சொல்லி, கோடீஸ்வரர்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஆளப்போகின்றனரோ... பாவம் ஏழைகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக