ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

"சார்ஜ் இல்லையே' இனி கவலையே வேண்டாம் ?

ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் பல மாதங்கள் பேசக்கூடிய அதி நவீன செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் உள்ள பேட்டரிகள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான செல்போன்களில் தினசரி சார்ஜ் செய்யும் நிலை உள்ளது.
ஒரு சில செல்போனில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்கு சார்ஜ் நிற்கும். தற்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதற்கான விசேஷமான பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண செல்போன் பேட்டரிகளை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை.
அவை உலோக டியூப்களுக்கு பதிலாக மிகச் சிறிய அளவிலான நானோடியூப்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை மனிதனின் ரோமத்தை விட 10 ஆயிரம் மடங்கு மிகச்சிறியதாகும். இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக