ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்: கருணாநிதி விளக்கம்


சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 119 தொகுதிகள்- வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுகிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி தொகுதிகள்- வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில அளித்தார்.


அப்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி, ``திருவாரூர் என் சொந்த ஊர், நான் பிறந்த ஊர், அங்கு நான் ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடக் கூடாது என்பதற்காக அப்போது இருந்த அரசியல்வாதிகள் திருவாரூரை தனி தொகுதியாக அறிவித்தனர்.

தற்போது அந்த தொகுதி பொதுத் தொகுதியாக மீண்டும் அறிவிக்கபட்டுள்ளதால் எனக்கு தனி தொகுதியாகிவிட்டது" என்று விளக்கம் அளித்தார் முதல்வர் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக