ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அ.தி.மு.க - தே.மு.தி.க. தொகுதி பங்கீடு உடன்பாடு: தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், தமிழக சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டது. ஏப்ரல் 13-ந் தேதி நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடுமா
? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சென்று கூட்டணி குறித்து அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். என்றாலும் தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாததால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு காரில் சென்றார். அவருடன் தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணிச் செயலாளர் சுதீசும் சென்றார்.

அவர்களுடைய கார் ராதாகிருஷ்ணன் சாலையில் வருவதை அறிந்ததும் ஜெயலலிதா வீட்டின் பிரதான கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. விஜயகாந்தின் கார் அங்கு வந்து சேர்ந்ததும், அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை 20 நிமிடம் நடைபெற்றது. பேசசுவார்த்தையின் போது, அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

13.4.2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4-ந் தேதி) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டு உள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்து விஜயகாந்த் வெளியே வந்தார். அங்கு செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கூடி இருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து விஜயகாந்திடம் கருத்து கேட்க முயன்றனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.

அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகளும், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அகில இந்திய சமத்தவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகிறது.

இதில் ஒரு சில கட்சிகளுடன் நேரடியாகவும், சில கட்சிகளுடன் ரகசியமாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டது. தே.மு.தி.க.வுடன் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த கட்சிகளுடனும் விரைவில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக