உலகில் எல்லா நாடுகளிலும் பெரும்பாலும் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும் விளங்குவது வீடியோ-கேம் தான். புதுவிதமான கதாபாத்திரங்களையும், சக்திகளையும் கொண்டிருக்கும் வீடியோ-கேம்களை சிறுவர்கள் விளையாடாமல் விடமாட்டார்கள். பிரபலமான நிறுவனத்தின் வீடியோ-கேம்கள் வந்த விரைவிலேயே விற்று தீர்ந்துவிடும்.
ஆனால் வளர்ந்துவரும் நிறுவனங்கள் தங்களது வீடியோ-கேம்களில் பிரபலமான நடிகைகளின் உருவத்தை பயன்படுத்தி தங்களது கேம்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும். அந்த நடிகைகளுக்கென ஒரு விலை பேசி கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் ஹாலிவுட் ஹீரோயின்களின் உருவத்தையே அனைத்து நாட்டு வீடியோ-கேம் நிறுவனங்களும் பயன்படுத்திவந்தன.
ஆனால் முதல்முறையாக இந்திய நடிகையான த்ரிஷாவின் உருவத்தை தனது வீடியோ-கேமில் பயன்படுத்தியுள்ளது ‘அட்லஸ்’ நிறுவனம். ’CATHERINE' என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோகேமில் வரும் ‘கோல்டன் பிளேஹவுஸ்’ என்ற டிவி நிகழ்ச்சியினை தொகுத்துவழங்கும் பெண்ணாக த்ரிஷாவின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ-கேமில் த்ரிஷா என்ற பெயரையே உபயோகப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் வீடியோ-கேமாக இல்லாமல் 18 வயதை தாண்டியவர்கள் மட்டும் விளையாடும் ’அடல்ட்’ வீடியோகேம் இது. த்ரிஷாவின் உருவமும் கவர்ச்சியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோகேமில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்கிறதே தவிர கவர்ச்சியான காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.
இந்த வீடியோ-கேமின் தன்மை தெரியாமல் ‘என் உருவமும் வீடியோகேமில் வந்துள்ளது’ என பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக