ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் பேஸ்புக்கில் மனதை தொலைத்த இந்திய ராணுவ லெப்டினட்



பேஸ்புக் மூலம் வலைவீசிய பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ யின் பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார் இந்திய ராணுவத்தின் லெப்டினட் கலோனல் ஒருவர்.
ராஜஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய ராணுவத்தின் கவசப் படைப் பிரிவின் லெப்டினட் கலோனலான இவர் அந்தப் பெண்ணுடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதை மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ கண்டுபிடித்து பாதுகாப்பு அமைச்சகத்தை எச்சரித்துள்ளது.

இதையடுத்து அந்த லெப்டினட் கலோனலிடம் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வங்கதேசத் தலைநகர் டாக்காவில் பயிற்சிக்காக சென்ற இன்னொரு இந்திய ராணுவத்தின் லெப்டினட் கலோனலையும் ஒரு பெண் 'வளைத்ததை' ரா உளவுப் பிரிவு கண்டுபிடித்தது. இதையடுத்து அவர் எச்சரிக்கப்பட்டார்.
இந் நிலையில் பேஸ்புக் மூலம் இன்னொரு அதிகாரி தானாகவே போய் ஐஎஸ்ஐ பெண் உளவாளியிடம் சிக்கியுள்ளார்.
உரிய அனுமதியில்லாமல் ராணுவ அதிகாரிகள் வெளிநாட்டினர் யாருடனும் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்பது விதியாகும். இதை அந்த லெப்டினட் கலோனல் மீறி என்னென்ன தகவலைகளை பகிர்ந்து கொண்டார் என்பது குறித்து ராணுவ உளவுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் இந்திய ராணுவ அதிகாரிகள் புனைப் பெயரில் தான் இடம் பெறலாம் என்ற விதி உள்ளது. தாங்கள் யார் என்பது குறித்தோ, தங்களது பதவி குறித்தோ, இருக்கும் இடம் குறித்தோ சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரிமாற தடை உள்ளது.
இதையும் மீறி தன்னைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்லி அந்தப் பெண்ணின் வலையில் வீழ்ந்துள்ளார் இந்த லெப்டினட் கலோனல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக