லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 5 வீரர்கள் நடைபந்தயம் மற்றும் மாரத்தானில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் பகதூர் ரானா என்பவர் 50 கிலோ மீட்டர் தூர நடை பந்தயத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதேபோல இர்பான் என்பவர் 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
கடந்த மே மாதம் ரஷ்யாவில் நடந்த பந்தயத்தில் பகதூர் ரானா 50 கிலோ மீட்டர் தூரத்தை 4 மணி 2 நிமிடம் 13 வினாடியிலும், இர்பான் ஒரு மணி 22 நிமிடம் 09 வினாடியிலும் கடந்து தகுதி பெற்றனர்.
இந்த இருவரும் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தரமான சப்பாத்து வாங்க முடியாத அவல நிலையில் உள்ளனர். இருவரும் இந்திய ராணுவத்தில் சிப்பாய்களாக உள்ளனர்.
அவர்களின் மாத வருமான ரூ.15 ஆயிரம் ஆகும். குடும்பம் வறுமையில் இருந்தாலும் அதையும் தாண்டி அவர்கள் நடைபந்தயத்திற்கு சப்பாத்து வாங்க பணம் செலவழித்து உள்ளனர்.
கடந்த 18 மாதத்தில் மட்டும் அவர் சப்பாத்துக்காக ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளார். ஒரு ஜோடி சப்பாத்துவின் விலை 6 ஆயிரம் வரை ஆகிறது.
கேரளாவை சேர்ந்த இர்பானின் குடும்பம் ஏழ்மை நிலையில்தான் உள்ளது. அவருக்கு நடிகர் மோகன்லால் உதவி வருகிறார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்களால் சிறப்பாக செயல்பட தரமான சப்பாத்து தேவை என்று இருவரும் கூறியுள்ளனர்.
ரானா கூறும்போது, நான் மாதம் தோறும் 1,100 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொள்கிறேன். குறைந்த பட்சம் ஆண்டுக்கு 6 முதல் 7 ஜோடி சப்பாத்து தேவைப்படுகிறது. அதை வாங்குவதற்கான வசதி எங்களிடம் இல்லை என்றார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக கோடிக்கணக்கில் செலவிடும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவிக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக