சோசியல் நெட்வொர்க் தளங்களில் அனைவரும் பயன்படுத்தும்
மிகப்பிரம்மாண்டமான தளமாக இருக்கும் பேஸ்புக் , டிவிட்டர், கூகிள் பிளஸ்
போன்ற அனைத்து தளங்களிலும் நாம் உரையாடிய உரையாடல்கள் மற்றும் படங்கள் என
அனைத்து தகவல்களையும் நம் கணினியில் சேமிக்கலாம் நமக்கு உதவ ஒரு மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
சோசியல் நெட்வொர்க் தளங்களில் உள்ள உங்கள் தகவல்களை சேமிக்கிறோம் என்று
பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் கூடவே தேவையில்லாத
எரிச்சலைத்தான் நம் கணினிக்கு கொண்டுவருகிறது , உதாரணமாக சில
மென்பொருட்களை நிறுவியதும் தேடுதல் பக்கம் மற்றும் சில தகவல்கள் நம்மிடம்
கேட்காமலே மாறிவிடுகின்றது அப்படி இப்படி என்று எந்தப்பிரச்சினையும்
இல்லாமல் சோசியல் நெட்வொர்க்ல் இருக்கும் நம் தகவல்களை சேமிக்க இந்த
மென்பொருள் உதவுகிறது.
தரவிரக்க்க முகவரி : http://socialsafe.net/
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தறவிரக்கி நம் கணினியில்
நிறுவிக்கொள்ளவும், அடுத்து மென்பொருளை இயக்கி நாம் நம்முடைய எந்த சோசியல்
நெட்வொர்க் தளத்தில் இருந்து தகவல்களை எடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து
நம் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து திறந்து கொள்ளவும். அதன்
பின் எந்த மாதம் எந்த திகதியில் உள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களை
தரவிரக்கம் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தால்
போதும்,Export all என்பதை சொடுக்கி அனைத்து தகவல்களையும் நம் கணினியில்
சேமிக்கலாம், புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக
வலைதளங்கள் பயன்படுத்தும் அனைவருக்குமே இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பயனுள்ள பதிவு ! நன்றி !
பதிலளிநீக்கு