ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜ்மீர் தர்காவில் தாய் அருகே படுத்திருந்த ஆண் குழந்தையை திருடிய பெண்: ரகசிய கேமராவில் பதிவானது

அஜ்மீர் தர்காவில் தாய் அருகே படுத்திருந்த ஆண் குழந்தையை திருடிய பெண்: ரகசிய கேமராவில் பதிவானதுகடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதி கோவிலில் படுத்திருந்த போது நள்ளிரவில் சென்னை தம்பதியின் குழந்தையை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றார். அந்த குழந்தையை போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் தர்காவில் தாய் அருகே படுத்திருந்த ஆண் குழந்தையை மர்ம பெண் ஒருவர் திருடிச் சென்றார். இதுபற்றிய விவரம் வருமாறு:- 

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சபியா. இவர் தனது குடும்பத்தினருடன் அஜ்மீர் தர்கா சென்றிருந்தார். இரவில் தர்கா வளாகத்தில் சபியா தனது 6 மாத ஆண் குழந்தை நசீருடன் படுத்து தூங்கினார். குடும்பத்தினர் அனைவரும் அடுத்தடுத்து படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் 1.30 மணிக்கு அனைவரும் நன்றாக அயர்ந்து தூங்கியபோது மர்ம பெண் ஒருவர் ஆண் குழந்தையை நைசாக திருடிச் சென்றாள். 
காலையில் சபியா கண் விழித்து பார்த்தபோது குழந்தை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதறி அழுதபடி அங்குள்ள போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜ்மீர் தர்காவில் உள்ள ரகசிய கேமராவில் பார்த்தபோது மர்ம பெண் குழந்தையுடன் வெளியே ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் முகம் சரியாக பதிவாகவில்லை. இதனால் அங்குள்ள ரெயில் நிலையத்தில் உள்ள ரகசிய கேமராவையும் போலீசார் பார்த்து வருகிறார்கள். 
ஒருவேளை அவள் அங்கு சென்றிருந்தால் முகத்தை தெளிவாக பார்க்க முடியும் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் உதவியுடன் மர்ம பெண்ணின் முகத்தை தெளிவாக பார்ப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சபியா கூறும்போது, குழந்தை எனக்கு கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கதறி அழுதார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக