ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

6 வயது வசிக் பர்ஹானின் திறமை தெரியுமா? புறோகிராமிங் நிபுணராக மைக்றோசொப்ட் அங்கீகாரம் (படங்கள்)


பங்களாதேஷை சேர்ந்த ஆறே வயதாகும் சிறுவன் கணினி புறோகிராமிங் துறையில் நிபுணராக விளங்குகிறான்.
நசிக் ஃபர்ஹான் ரூப்கோதா என்ற சிறுவனே தனது சிறு வயதிலேயே கணினி நிகழ்ச்சி நிரலாக்கத்தில் சக்கை போடு போடுகிறான்.

இவனது திறமையை மைக்றோசொப்ட் நிறுவனமும், கின்னஸ் நிறுவனமும் அங்கீகரித்திருப்பது மேலதிக சிறப்பாகும்.
தனது 3 வது வயதிலேயே மைறோசொப்ட் மென்பொருட்களில் கைதேர்ந்து விளங்கிய இச்சிறுவன், தற்போது C++ மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளான்.
இவனது தனித்திறமையை சிறுவயதிலேயே அடையாளம் கண்டுகொண்ட இவனின் பெற்ரோர்கள், இவனை பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்தே கணினி அறிவு புகட்டி வருகிறார்கள்.
எதிர்காலத்தில் கணினி துறையில் தனது மகன் புரட்சி செய்வான் என குறித்த சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக