மழையிலிருந்து தப்பிக்க குடை பிடிப்பது தான் வழமை. ஆனால் பிரித்தானியர்களுக்கு கையால் குடை பிடிப்பது கஷ்டமாக இருந்திருக்கிறது.
அதைப் போக்க அவர்கள் கை பிடிக்கத் தேவையில்லாத குடையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இனி மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தோளில் பொருத்தப்பட்ட வித்தியாசமான ஒரு குடையை அணிந்திருக்கிறார்கள் இவர்கள்.
இந்தக் குடையின் விலை £40 பவுண்ட் மட்டுமே. 50mph வேகத்தில் வீசுகின்ற காற்றையும் எதிர்க்கிறதாம் இந்தக் குடை.
இதிலுள்ள விசேடம் என்னவென்றால் மழையில் அல்லது வெய்யிலில் சைக்கிளில் செல்லும் போது இலகுவாகப் பிடிக்கலாம் என்பது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக