முற்றிலும் தானியங்கி முறையில் கேக் தயாரித்து வழங்கும் ஏ.ரி.எம் (Auto Teller Machine) இயந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்பார்வைக்கு சாதாரண வங்கி ATM இயந்திரம் போல இருக்கும் இவ் இயந்திரத்தின் உட் பகுதியில், கேக் தயாரிப்புக்கு வேண்டிய பொருட்கள், ஓவன் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடுதிரை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள இவ் இயந்திரத்தின் மெனுவில் எமக்கு தேவையான கேக்கை தெரிவு செய்து, கடனட்டை மூலம் பணம் செலுத்தினால் போதும்…
திரையில், இயந்திரத்தின் உள்ளே கேக் தயாரிக்கப்படுவது கமெராவின் உதவியுடன் காண்பிக்கப்படும். கேக் தயாரானதும், அதனை அழகாக பொதி செய்து, பில் உடன் தந்து விடுகிறது இவ் இயந்திரம்.
இக் கேக் தயாரிப்பில் முற்று முழுதாக இயந்திர தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுவதால், 24 மணி நேரமும் கேக் ஐ பெற்றுக்கொள்ளலாம். அதுவும் Fresh ஆக…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக