ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இன்று கூகுளில் தெரிவது ஜிம் ஹென்சனின் பிரசித்தி பெற்ற Puppets பொம்மைகள்!



Puppets எனப்படும் உயிரோட்டமுள்ள பொம்மைகளின் உருவாக்குனர் ஜிம் ஹென்சென் (Jim Henson) இன் 75 வது பிறந்த தினத்தை, கூகுள் நிறுவனம் மப்பெட்ஸ் பொம்மைகள் மூலமே இன்று கொண்ட்டாடுகிறது.



ஜிம் ஹென்சன் உருவாக்கிய ஆறு கதாபாத்திர பொம்மைகளின் உருவங்களை தனது டூடுள் சின்னத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஏற்பட வடிவமைத்துள்ளது. உங்களால் அப்பொம்மைகளை இலாவகமாக இயக்க முடியுமெனில் நீங்கள் கெட்டிக்காரர்கள் தான் என்கிறது கூகுள் நிறுவனம்.


மவுஸை அப்பொம்மைகளுக்கு அருகில் கொண்டு சென்று அழுத்தும் போது, அவை கண்களை சுழற்றிய படி அசைவதை காணலாம். கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டினீர்கள் எனில் எதிர்பாராத அனிமேஷன்களை அவை செய்ய தொடங்கிவிடுகின்றன.


கூகுள் நிறுவனமும், த ஜிம் ஹென்சன் நிறுவனமும் இணைந்து இந்த டிஜிட்டல் பப்பெட்ஸ்களை உருவாக்கியிருக்கிறார்கள்.பப்பெட் உருவாக்குனர்களில் மிகவும் சுவாரஷ்யமானதும், நகைச்சுவை தன்மை கொண்டதுமான பப்பெட்களை உருவாக்குபவர் என்ற பெருமை ஹென்சனுக்கே உண்டு.


ஹென்சனின் பப்பெட்கள், தெரு நாடகங்களில், மேடை நாடகங்களில் தொடங்கி, நகைச்சுவை, திரில்லர் திரைப்படங்கள் வரை புகழ்பெற்றிருந்தன.


அவர் 1990 ம் ஆண்டு உயிரிழந்த பிறகும் உலகில் உயிர்த்துடிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்களுக்காக அவர் இயக்கிய Sesame Street, Fraggle Rock, the Muppet Show, & The Dark Crystal ஆகிய நிகழ்ச்சிகள் இன்று 30 வயதை எட்டிக்கொண்டிருக்கும் பெரும்பாலனவர்களுக்கு  தமது சின்னவயது ஞாபகங்களாக மனதில் பதிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்ல.



Miss Piggy, Yoda, Elmo, Bing Bird மற்றும் ஹென்சனின் குழுவில் இடம்பிடித்த மற்றைய பெப்பெட்களும் உலக பிரபல் வாய்ந்தவை. ஹென்சன் தனது கைகளால் தானே இயக்கி குரல் கொடுத்து இயக்கிவந்த Kermit the Frog, தொலைக்காட்சி காமிக் நிகழ்ச்சித்தொடர்களில் ஒரு புதிய சரித்திரத்தையே படைத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக