ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சமச்சீர் புத்தகங்களுக்காக ஆயிரக்கணக்கில் பணம் வசூல்



திருவள்ளூர், செப். 1: தனியார் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே புத்தகங்களுக்காக வசூலித்தக் கட்டணம் திருப்பித் தரப்படுமா? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதில் எழுந்த சிக்கல் காரணமாக 2 மாதங்கள் வரை காலதாமதம் ஏற்பட்டது. இந்த இடைவெளியின் போது எந்தப் பாடம் நடத்துவது என்ற குழப்பத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இருந்தனர்.
சில பள்ளிகளில் இணையதளத்தில் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை நகல் எடுத்து நடத்தி வந்தனர்.
ஆனால் எந்தப் பாடத் திட்டம் வந்தாலும் தங்களுக்கு வர வேண்டிய புத்தகக் கட்டணம் வந்தே தீர வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள், பெற்றோர்களிடம் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வராது எனக் கூறி முதல் வகுப்புக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 10-ம் வகுப்பு வரை ரூ. 3 ஆயிரம் வரை புத்தகக் கட்டணம் வசூலித்தனர்.
ஆனால் புத்தகம் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்தது.
அனைத்துப் பள்ளிகளிலும் இலவச சமச்சீர் பாடப் புத்தகம் வழங்கப்பட்டு தற்போது பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் புத்தகக் கட்டணமாக பெற்றோர்களிடம் இருந்து வசூலித்தத் தொகை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளனர்.
எனவே புத்தகக் கட்டணம் வசூலித்து புத்தகம் தராமல் இருக்கும் பள்ளி நிர்வாகத்தினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டபோது, "சமச்சீர் கல்வி பாடப்புத்தகம் அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.
தனியார் பள்ளிகள் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்துக்கு பணம் கட்டிதான் புத்தகத்தைப் பெறுகின்றனர்.
புத்தகங்களின் விலை: 1, 2 ஆகிய வகுப்புகளுக்கு ரூ.200, 3, 4, 5, 6, ஆகிய வகுப்புகளுக்கு ரூ.250, 7, 8-ம் வகுப்புக்கு ரூ.300, 9, 10-ம் வகுப்புக்கு ரூ.350 என தனியார் மெட்ரிக் பள்ளிகள் பணம் கட்டிப் புத்தகங்களை வாங்குகின்றனர். இதை பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்' என்றனர்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து தனியார் பள்ளிகள் பணம் செலுத்திதான் புத்தகங்களை வாங்கி வருகின்றனர் என்றும் அதற்கான கட்டணத்தையும் கூறும் துறை அதிகாரிகளின் விளக்கத்துக்கு ஏற்ப, தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், 10-ம் வகுப்பு வரை ரூ.500-க்கு பெருமானமுள்ளப் புத்தகங்களை, வகுப்புகளுக்கேற்ப ஆயிரக்கணக்கில் வசூலித்ததாக தெரிகிறது.
அவ்வாறு வசூலித்த கட்டணத்தில் இருந்து புத்தகங்களுக்கான கட்டணம் போக மீதி பணத்தைத் திருப்பி தருவதுதானே நியாயம்!
இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ஆயிரக்கணக்கில் வசூல் செய்யப்பட்ட பணத்தை பெற்றோருக்கு திருப்பி செலுத்த உத்தரவிட்டு, அவர்கள் வயிற்றில் பாலை வார்க்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக