கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷியாம் சுந்தர், மணிமேகலை, பிரின்ஸ் கஜேந்திரபாபு உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்றது.
அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதிகிருஷ்ணன் வாதிடுகையில், உலகத் தரத்துக்கு பாடம் இல்லாததால் சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, சர்ச்சைக்குரியவற்றை நீக்கி நடப்பாண்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கூடாதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் முடிவின் உண்மையான நோக்கம் என்ன? என்று வினா எழுப்பிய தலைமை நீதிபதி, சமச்சீர் கல்வி ரத்தால் ஏற்படும் ரூ.200 கோடி இழப்பு யாருடையது என்றார்.
இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி மாலை தீர்ப்பு அளிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தம் தமிழக அரசின் சட்டத்திருத்திற்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 1, 6ஆம் வகுப்புகளில் இந்தாண்டும் சமச்சீர் கல்வியை நடப்பாண்டிலும் தொடரலாம் என்று உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக