ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாலஸ்தீனதனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்” ஐ.நா.வில் அதிகாரபூர்வ கடிதம்!


 ஐ.நா.வின் முழுமையான அங்கீகாரம் பெற்ற அங்கத்துவ நாடாக தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு அதிகாரபூர்வ கடிதத்தை, பாலஸ்தீன அதிகார சபை தலைவர் மஹ்மூத் அப்பாஸ், ஐ.நா.விடம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த நடவடிக்கையில் தாம் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்த முயற்சியை எதிர்க்கின்றன. “பாலஸ்தீன அதிகார சபை என்பது, பாலஸ்தீனர்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களுக்காக பேச்சுக்களை நடாத்தும் அதிகாரம் இவர்களுக்கு கிடையாது” என்பது இவர்கள் கூறும் காரணம்.
அதிகாரபூர்வ கடிதத்தை மஹ்மூத் அப்பாஸ், ஐ.நா. சபையில் தனது பேச்சைத் தொடங்கும் முன்னர், பொதுச் செயலர் பான்-கி-மூனிடம் கையளித்தார்.
இது பற்றிய நடைமுறை என்ன? இந்தக் கடிதம், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலிடம் பொதுச் செயலரால் அங்கீகாரத்துக்காக ஒப்படைக்கப்படும். பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள், இந்தக் கோரிக்கை பற்றி ஆராய்ந்து, இவர்களை அங்கத்துவ நாடாக ஏற்றுக் கொள்வதா என, முடிவு செய்யும்.
பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கும் நிலையில், பாலஸ்தீனர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட 9 நாடுகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஒன்பது நாடுகள் ஆதரவாக வாக்களிக்காத விதத்தில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கும் என்பதை மிகச் சுலபமாக ஊகித்துக் கொள்ளலாம்.
அப்படியும், ஒன்பது நாடுகள் ஆதரவு கொடுக்க தீர்மானித்தால், அமெரிக்கா தனது வீட்டோ சக்தியைப் பயன்படுத்தி, பாலஸ்தீன அதிகார சபைக்கு அங்கீகாரம் கொடுக்கப்படுவதைத் தடுக்க முடியும்.
ஐ.நா. சபையில் பேசுவதற்காக வந்திருந்த மஹ்மூத் அப்பாஸ், தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில், அமெரிக்காவில் வசிக்கும் பாலஸ்தீனர்களை சந்தித்து, நிலைமையை விளக்கினார். அப்போது, இந்தக் கடிதத்தை கொடுக்க விடாது செய்வதற்காக அமெரிக்கா தன்னை பல விதங்களிலும் தடுக்க முயன்றது என்றார்.
“இன்று உலகிலுள்ள பல மிகச் சிறிய இன மக்கள், தமக்கும் ஒரு நாடு வேண்டும் என்று போராடி நாடுகளைப் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு படிப்படியாக ஐ.நா. அங்கீகாரமும் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாமும், எமக்குரிய நாடு ஒன்றை அடைவதற்காக போராடும் முயற்சிதான் இது” என்றும், அங்கு வந்தவர்கள் மத்தியில் அவர் பேசினார்.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியை, இஸ்ரேலிடமிருந்து பெற்று பாலஸ்தீன நாடு ஒன்றை உருவாக்குவதே, இவர்களது முக்கிய கோரிக்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக