ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெயலலிதா, சுவாமியின் வலையில் எப்படிதான் சிக்கினாரோ

    அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு குடைச்சல் கொடுப்பதற்காக சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்குகள் புதிய திருப்பம் ஒன்றைச் சந்தித்துள்ளன. காரணம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முன்பு நிதியமைச்சு அனுப்பிவைத்த கடிதம் ஒன்று தற்போது வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அதே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில்தான், அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்பது, சுவாமி தொடுத்துள்ள வழக்கு.

இதிலுள்ள அடுத்த முக்கியத்துவம், இதன் காரணமாக அமைச்சர் சிதம்பரம் பதவி விலகவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கோரிக்கை விடுத்துள்ளதுதான். “இந்த விவகாரத்தி்ல் தொடர்புடைய சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கைபோல, சிதம்பரம் மீதும் எடுக்கப்பட வேண்டும். இவர் பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் பிரதமர் அவரை நீக்க வேண்டும்” என்கிறார் தமிழக முதல்வர்.

மொத்தத்தில், இன்றைய தேதியில் டில்லியில் அதிகம் பரபரப்பாக அடிபடும் விவகாரம் இந்த கடிதம்தான்!

சரி. கடிதம் எவ்வளவு முக்கியமானது?

இவர்கள் குறிப்பிடுவது, நிதி அமைச்சக அதிகாரிகள் குழு ஒன்றிடமிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றைப் பற்றித்தான். 6 மாதங்களுக்கு முந்திய கடிதம் இது. கடந்த மார்ச் 25ம் தேதி (2011) நிதி அமைச்சகத்தின் துணை இயக்குனர் டாக்டர் பி.ஜி.எஸ்.ராவ், எழுதியுள்ளார்.

பிரதமரின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்படும் முன்னர், தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகார்ஜியின் பார்வைக்குச் சென்றிருக்கிறது கடிதம். அவரும், கடிதத்தைப் படித்து அப்ரூவல் கொடுத்த பின்னரே, பிரதமரின் அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.

இன்று கடிதம் வெளியாகிய உடனேயே இது பற்றிய சர்ச்சைகள் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சி பாரதீய ஜனதா, ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறது. பிரதம் நாட்டில் இல்லை. நியூயோர்க் சென்றுள்ள அவருடன் அமைச்சர் சிதம்பரம் போனில் தொடர்பு கொண்டு, இதுபற்றி விளக்கம் கொடுத்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தக் கடிதத்தில், அப்படி ஏதாவது ஹாட் ஸ்டஃப் உண்மையிலேயே உள்ளதா?

கடிதத்தில் உள்ள விஷயம், அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், கடிதத்தில் இருப்பவை கோர்ட்டில் நிற்குமா என்பது சந்தேகம்தான்.

அப்படி என்னதான் உள்ளது கடிதத்தில்?

நீளமாக கடிதத்தில், சர்ச்சைக்குரிய வாசகங்கள் இவைதான்: “ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பாக நாம் (நிதி அமைச்சக அதிகாரிகள்) அதன் உரிமங்களை ஏலம் விடத்தான் வேண்டும் என வலியுறுத்தினோம். இது அப்போதைய நிதி அமைச்சரின் (ப.சிதம்பரம்) கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
அவர் நினைத்திருந்தால், ஸஇபெக்ட்ரம் உரிமங்களை கட்டாயம் ஏலம் மூலம்தான் விற்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க முடியும். அவர் அப்படிச் செய்திருந்தால், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை தவிர்த்து பல கோடி இழப்பை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்”

இந்தக் கடிதம், நிதி அமைச்சகத்தில் இருந்து பிரதமர் அலுவலக இணை செயலர் வினி மகாஜனுக்கு போய்ச் சேர்ந்துள்ளது. அதைப் படித்து பிரதமர் ஆக்ஷன் ஏதாவது எடுத்தாரா என்பது தெரியவில்லை.

ஒரு விதத்தில் பார்த்தால், இது ஒன்றும் பரம ரகசியமான கடிதமல்ல. அரசாங்கள் வெளியிட விரும்பாத கிளாஸிஃபைட் டாக்குமென்டும் அல்ல. மிகச் சுலபமாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் விண்ணப்பித்து, பெறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கடிதம், சுப்ரமணியம் சுவாமியின் தடாலடி வழக்குக்கே பெரிதும் துணை போகக்கூடியது. இதை வைத்துக்கொண்டு அவரால் வாதாட முடியும். அரசியல் அரங்கில் சர்ச்சைகளைக் கிளப்பிவிட முடியும். அதற்குமேல் கடிதத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற வகையில்தான் உள்ளது இந்தியச் சட்டம்.

இதை தமிழக முதல்வர் ஜெயலலிதா கையில் எடுத்திருப்பதுதான் ஆச்சரியத்துக்குரிய விஷயம்.

முதல்வருக்கும், ப.சிதம்பரத்துக்கும் ஏழாம் பொருத்தம் என்பது புதிய விஷயமல்ல. இம்முறை முதல்வர் பதவியேற்றபின் டில்லி சென்ற ஜெயலலிதா, அங்கு வைத்தும் சிதம்பரத்துக்கு எதிராக பேட்டி கொடுத்திருந்தார். (அதைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

அதனால், சிதம்பரத்துக்கு எதிராக பேச மற்றொரு சந்தர்ப்பம் என்ற முறையில் இதைக் கெட்டியாக அவர் பிடித்திருக்கலாம். சிதம்பரத்தின் பதவி விலகலைக் கோரியிருக்கலாம். அதில் ஆச்சரியம் ஏதும் கிடையாது.

ஆச்சரியம் எதில் என்றால், முதல்வரின் அறிக்கை வெளியாகியுள்ள டைம்-பிரேமில்தான்.

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் காங்கிரஸை ஒதுக்கி விட்டுள்ளது தி.மு.க. இதனால் இரு தரப்புக்கும் முறுகல் நிலை உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியிலும் சகலரும் ஒதுக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில், அங்கே (காங்கிரஸ்) கைகொடுக்க யாருமில்லை. இங்கே (அ.தி.மு.க.) கைகொடுத்தால் கேட்க ஆளில்லை.

தொலைநோக்கில் அ.தி.மு.க.-காங்கிரஸ் உறவுக்கான பாதையின் தொடக்கம் இது. அப்படியிருந்தும், ப.சிதம்பரத்துக்கு எதிரான ஜெயலலிதாவின் அறிக்கை வெளியாகியுள்ளது.

சு.சுவாமியின் தடாலடி அரசியலுக்குத்தான் ஜெயலலிதாவின் அறிக்கை உதவப் போகின்றது. அதைத் தவிர, டில்லியில் எந்த சலனத்தையும் ஏற்படுத்த முடியாத கோரிக்கை இது. (பா.ஜ.க.வின் அலறலே டில்லியில் சிங்கியடிக்கிறது)

அடடா.. சுவாமியின் ட்ராப்புக்குள் எப்படிச் சிக்கினார் முதல்வர்?

இருந்து பாருங்கள், சுவாமி இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தமிழகத்தில் அரசியல் செய்யப் பார்ப்பார்! யார் கண்டது,  இத்துடன் சுவாமி முதல்வருடனும் நெருங்கி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  எல்லாம் அரசியல்தானே!  உள்ளாட்சித் தேர்தலிலும் மதுரைப் பக்கத்தில் சீட் கேட்டுப் பார்க்கலாம்.

சுவாமி,  கடைசியாக ஜெயலலிதாவுடன் நெருங்கி கூட்டணி வைத்ததும், ஒரு வழக்கின் மூலமாக என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக