ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மீன் சாப்பிடுங்கோ ஞாபக சக்தி (Memory Power) அதிகரிக்கும்!! ஆராய்ச்சி தகவல்


நியூசிலாந்தின் மஸ்ஸே யுனிவர்சிட்டி பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர்.http
://www.kalvikalanjiam.com
பின்னர், இவர்களுக்கு வஞ்சிரம், இறால் உள்ளிட்ட பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரிய வந்தது.
அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில்   உள்ள ஒமேகா&3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளை யின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது.

1 கருத்து: