ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காலாண்டுத் தேர்வு விடுமுறை 9ம் தேதி வரை நீட்டிப்பு




சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான, காலாண்டுத் தேர்வு விடுமுறை, அக்டோபர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
.
10ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மணி கூறும்போது, "பள்ளிகளில் நடந்து வரும் காலாண்டுத் தேர்வுகள், வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன.
அதன்பின், காலாண்டுத் தேர்வு விடுமுறை. விடுமுறைக்குப் பின், அக்., 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும் என, ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது, பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
அக்டோபர் 7ம் தேதி வெள்ளிக்கிழமை. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். இதை கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறப்பு தேதி, 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக