ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெயலலிதாவுக்கு 40 தொகுதிகளையும் பெற்றுத் தருவேன்-சீமான்


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்ற ஒன்றே இல்லாமல் செய்வோம். தமிழினத்துக்கு உறுதுணையாக திகழும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு இனி வரும் தேர்தல்களிலும் வெற்றி தேடித் தருவோம். வருகிற லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் ஜெயலலிதாவுக்காக வெல்வோம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் பேசினார்.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.ஜி.ஆர். நகரில் பொதுக் கூட்டம் நடை பெற்றது.
இதில் பங்கேற்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது:
நமது தம்பிமார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறை வேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எத்தனையோ போராட்டங்களை நாம் நடத்தினாலும், சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம்தான் 3 பேரின் உயிரையும் காப்பாற்றியிருக்கிறது. இதற்காக நாம் நன்றி தெரிவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டாமல் வேறு யாரை பாராட்டுவது. தமிழினம் இலங்கையில் முழு உரிமையையும் பெற்று வாழும்வரை ஓய மாட்டோம் என முழங்கிய பெருமாட்டி ஜெயலலிதாதான் இந்த ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதி. அவரைப் பாராட்டுவது தவறு என்று யாரேனும் சொன்னால் அந்தத் தவறை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம், சந்தோஷமாக.
இந்த சீமான் என்னதான் பிரச்சாரம் செய்தாலும், அதை கேட்டு, தன் வாயால் முதல்வர் அவர்கள் ஆணையிடும்போதுதான் எதுவும் நடக்கும்.
இன்றைக்கு கருணாநிதி எனக்கு முரசொலியில் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரிடம் சொல்லி அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றச் சொல்லுங்கள் என்று அறிவுரைக்கிறார். அய்யா கலைஞர் அவர்களே, நான்கு மாதங்களுக்கு முன் நீங்கள்தானே முதல்வர். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
3 தமிழர்களின் உயிரை பறிக்க காங்கிரசார் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினரை அதில் பங்கேற்க வைத்துள்ளனர். ராஜீவ் காந்தி பலியானது போல ஒரு காங்கிரசார் கூட அருகில் இல்லையே அது ஏன் என்று இந்த குடும்பத்தினர் கேட்க வேண்டும். அம்மையார் சோனியா காந்தியும் அருமைத் தம்பி ராகுலும் இதனை தமிழகர காங்கிரசாரிடம் கேட்க வேண்டும். ராஜீவைக் கொன்றது நாமல்ல, காங்கிரஸார்தான்.
வரலாறு தெரியாமல் காங்கிரசார் பேசுகிறார்கள். ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவசரம் அவசரமாக தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் தூக்கு தண்டனை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பெங்களூர் வழக்கில் நேரில் வரவேண்டும் என முதல்வரை நிர்ப்பந்திக்கிறார்கள்.
வேலூர் சிறையில் வாடும் 3 தம்பிகளையும் சாக விட மாட்டோம். அவர்கள் மீது தூசு கூட விழ அனுமதிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தூக்கில் போட முடியாது எனது பிணத்தின் மீது நின்றுதான் 3 பேரையும் தூக்கில் போட முடியும். இவர்களை காப்பாற்றுவது எப்படி என்று எங்களுக்கு தெரியும்.
போராடுவது எப்படி என்று தலைவர் பிரபாகரன் சொல்லிக் கொடுத்துள்ளார். போர்க்களத்தில் அவரை சந்தித்த போது எனது கையை பிடித்துக் கொண்டு எப்படி போராட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது எப்படி என்றே 10 புத்தகங்களை பிரபாகரன் எழுதியுள்ளார்.
3 பேரையும் தூக்கில் போட தூக்கு கயிறு தயாராகி விட்டது என்ற மமதையில் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்.
தமிழர்களை கொன்று குவிப்பதற்கு காரணமாக இருந்த காங்கிரசுக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை.
காங்கிரசுக்கான தூக்கு கயிறு எங்களிடம் தயாராக உள்ளது. வேரோடு, வேராக மண்ணில் காங்கிரசை சாய்ப்பதே எங்கள் லட்சியம் இதனை நிச்சயம் செய்து காட்டுவோம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை அனைத்து தொகுதிகளிலும் தமிழர்கள் தோற்கடிப்பார்கள். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். இதற்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் முதல்வர் ஜெயலலிதாவை தமிழர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். இந்த தமிழின சரித்திரத்தில் அவர் பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவர் இதனைச் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்றார்.
பேராசிரியர் தீரன், இயக்குநர் மணிவண்ணன், தடா சந்திரசேகர், கலைக் கோட்டுதயம், அய்யநாதன், பால் நியூமன், கார்வண்ணன், ஜெயசீலன், கல்யாண சுந்தரம் திலீபன், அன்பு தென்னவன், தங்க ராசு, பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக