இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது,
இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா? வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக