ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏர்செல்லுக்கு லைசென்ஸ் வழங்காமல் பைலை கிடப்பில் போட தயாநிதிமாறன் உத்தரவிட்டார்; முன்னாள் உதவியாளர் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம்



 
ஏர்செல்லுக்கு லைசென்ஸ் வழங்காமல் பைலை கிடப்பில் போட 
 
 தயாநிதிமாறன் உத்தரவிட்டார்;
 
 முன்னாள் உதவியாளர் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம்ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் கடைசியாக தயாநிதி மாறன் பதவி இழந்தார். இவர் முன்பு தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்தார். இவருக்கு எதிராக ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரன் பரபரப்பு புகார் கூறினார்.
 
தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்த மேலும் சில வட்டாரங்களுக்கு லைசென்ஸ் வழங்க கோரி விண்ணப்பித்தது.   ஆனால் லைசென்ஸ் வழங்காமல் இழுத்தடித்தார். பின்னர். இவரது கட்டாயத்தின் பேரில் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.
 
மேக்சிஸ் நிறுவனம் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்தது. ஏர்செல் நிறுவனம்மேக் சிஸ் நிறுவனத்துக்கு கைமாறிய உடனேயே 14 வட்டாரங்களுக்கான லைசென்ஸ்கள் ஏர்செல்லுக்கு வழங்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டது. சிவசங்கரனின் புகார் குறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
 
முதற்கட்ட விசாரணையில் தயாநிதி மாறனுக்கு எதிரான புகாரில் ஆதாரம் இருப்பதாக கூறியது.   இதையடுத்து தயாநிதி மாறன் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தயாநிதிமாறனின் முன்னாள் உதவியாளர் (தனி செயலாளர்) சஞ்சய்மூர்த்தி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
 
ஏர் செல் நிறுவனத்தின் முந்தைய உரிமையாளரான சிவசங்கரன், தனது நிறுவனத்தின் சேவையை விரிவுபடுத்த வேண்டி, சில வட்டாரங்களுக்கு லைசென்ஸ் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் லைசென்ஸ் வழங்குவதை அப்போதைய தொலைத் தொடர்பு துறை மந்திரி தயாநிதி மாறன் வேண்டுமென்றே தாமதப்படுத்தினார்.
 
சிவசங்கரன் தொடர்பான பைல்களை தயாநிதிமாறன் கவனத்துக்கு கொண்டு சென்ற போது அதை கிடப்பில் போடுமாறு எனக்கு உத்தரவிட்டார். கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் சன் டி.வி.யில் முதலீடு செய்துள்ள ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரால்ப் மார்சல் மற்றும் மேக்சிஸ் நிறுவன நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் தயாநிதி மாறனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள்.
 
இதே ஆண்டில் மேலும் பலர் தயாநிதி மாறனை மூன்று, நான்கு முறை சந்தித்து விட்டு சென்றனர். அவர்கள் இங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தனர். லைசென்ஸ் விஷயமாக சிவசங்கரன் தொலைத் தொடர்பு துறை அலுவலகத்துக்கு பல முறை வந்து பேசி விட்டு போனார். ஆனால் அவர் தனது நிறுவனத்தின் 74 சதவிகித பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததும் உடனே 14 வட்டாரங்களுக்கான லைசென்ஸ்களை தயாநிதி மாறன் வழங்கினார்.
 
இவ்வாறு அவர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக