ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிருடன் “தகாதஉறவு” இல்லை: இம்ரான்கான் மறுப்ப



 
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிருடன் “தகாதஉறவு” இல்லை: இம்ரான்கான் மறுப்புபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான். தற்போது இவர் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்டோபர் சாண்ட்போர்டு என்பவர் இம்ரான்கானின் சுயசரிதையை புத்தகமாக எழுதினார். அதில், கடந்த 1970ம் ஆண்டுகளில் இம்ரான்கான் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.
 
அப்போது, பெனாசிர் பூட்டோவும் அங்கு கல்வி பயின்றார். அவருக்கு இம்ரான்கான் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு இடையே “செக்ஸ்” உறவு இருந்தது. இதை அறிந்த இம்ரான்கானின் தாயார் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயன்றார். ஆனால், அவரது முயற்சி பலிக்கவில்லை என கூறியிருந்தார்.  
 
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த பிராஸ் ஷுகூர் என்பவர் இம்ரான்கான் குறித்து தற்போது மற்றொரு சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அதில், பெனாசிர் மீது நான் காதல் வயப்பட்டிருந்தேனே தவிர அவருடன், தகாத உறவு வைத்துக் கொள்ளவில்லை என இம்ரான்கான் மறுத்துள்ளார்.
 
அதே நேரத்தில் பெனாசிரை திருமணம் செய்து கொள்ள எனது உறவினர் விரும்பினார். எனவே, அவரை நான் அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால் அவர்களுக்கு இடையே திருமணம் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.  
 
 மேலும் கூறும்போது, முதல் முஸ்லிம் பெண் பிரமதராக பெனாசிர் பதவி ஏற்றபோது எனது சிறந்த நண்பர் ஒருவரை இழந்துவிட்டதாக கருதினேன். அதேவேளையில் அவரது தன்னம்பிக்கையை பார்த்து வியந்தேன் என்றும் அதில் கூறியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக