ஏழை எளிய மக்களுக்கு திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய தங்கம் வழங்கும் திட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது ஏழு ஏழைப் பெண்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய, நான்கு கிராம் தங்க நாணயம் வழங்கினார்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டத்தையும் முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போது ஏழு பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக