ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது செருப்பு வீச்சு: போலீஸ் விசாரணை



டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ராம்தேவ் குறித்து பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் திவிவேதி மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
நவ்சஞ்சார் என்ற ராஜஸ்தான் பத்திரிகையை சேர்ந்த சுனில் குமார் என்பவர் தான் அணிதிருந்த செருப்பை எடுத்து ஜனார்த்தனன் திவிவேதியை தாக்க வேகமாக பாய்ந்தார். உடனே அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் சுனில் குமாரை அடித்து இழுத்து சென்றனர்.

இதையடுத்து டெல்லி பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இதுபற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் திவிவேதி கூறுகையில், தன் மீது நடத்தபட்ட திட்டமிட்ட சதி என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக