ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கிழிச்சி டோமில்ல ! ஆசிரியர்கள் நிம்மதி

சமச்சீர் கல்வி புத்தகங்களில்
‘‘ரெஸ்ட்டே இல்லாம ஆயிரம் புக்ஸ் ..
 சென்னை: ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சில பக்கங்களை கிழிப்பது, அழிப்பது உள்ளிட்ட பணிகள் நேற்றுடன் முடிந்தன. பள்ளிகளுக்கு  புத்தகங்கள் அனுப்பும் பணி நடக்கிறது
. சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்ட பிறகு உச்ச நீதிமன்றத்தில் பொதுமக்கள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 1 மற்றும் 6ம் வகுப்பு புத்தகங்களை மட்டும் வழங்க உத்தரவிட்டது.

இதையடுத்து 1 மற்றும் 6ம் வகுப்பு புத்தகங்களில் தமிழ், சமூக அறிவியல் பாடங்களில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்த விவரங்கள், திமுக கொடி நிறத்தில் உள்ள படங்கள், குறிப்பிட்ட சிலரின் கவிதைகள் செம்மொழி மாநாட்டு இலச்சினை ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து அந்தந்த  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மேற்கண்ட புத்தகங்களில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது போல் சில பகுதிகளை முழுமையாக நீக்குதல், சில பகுதிகளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தல், பாடப்பகுதின் இடையில் இடம் பெற்ற சில வரிகளை மார்க்கர் மூலம் அழித்தல் உள்ளிட்ட பணிகளை அவசரம் அவசரமாக மேற்கொண்டனர். இதற்காக தமிழகம் முழுவதும் 5000க்கும் மமேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பணியை இரண்டு நாட்களாக செய்து வருகின்றனர்.
சுமார் 1 கோடியே 60 லட்சம் புத்தகங்களில் இது போன்ற கிழித்தல், மறைத்தல், அழித்தல் செய்ய வேண்டியுள்ளதால் நேற்றும் இந்த பணிகள் தொடர்ந்தன.
சென்னையில் நேற்றுடன் இந்த பணிகள் முடிந்து அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று மாலை வரை இந்த பணி முடியவில்லை என்று தொடக்க கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். சில மாவட்டங்களில் நேற்றும் இந்த பணி முடியாததால், பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து சென்று பள்ளியில் வைத்தே கிழித்தல், அழித்தல் பணிகளை செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து புத்தகங்கள் நேற்று பள்ளிகளுக்கு சென்று சேர்ந்தன. புத்தகங்கள் இன்று அல்லது நாளை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக