இந்தியாவின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனமான இன்டிகோ நிறுவனத்தை நடத்துவது வாடியா குடும்பமாகும். சில காலமாகவே தனது விமான சேவையை விரிவாக்கும் திட்டத்தை பரிசீலித்து வந்த இந்த நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் விரிவாக்கத் திட்டத்தில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் எந்த தனியார் நிறுவனமும் செய்யாத அளவுக்கு ரூ. 72,000 கோடி முதலீட்டில் ஏ-320 ரக விமானங்களை ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கவுள்ளது.
இது தொடர்பான முதல் கட்ட ஒப்பந்தத்தில் இன்டிகோ நிறுவனமும், ஏர் பஸ் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. இப்போது பாரீசில் நடந்து வரும் விமானக் கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது. ஒரே நேரத்தில் இத்தனை விமானங்களுக்கான ஆர்டரை இதுவரை எந்த நிறுவனமும் ஏர் பஸ் நிறுவனத்துக்குத் தந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக