ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலவச திட்டத்தில் ஆர்டர் பெற கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் புதிய கூட்டமைப்பு


 
கோவை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் மொத்த கிரைண்டர் உற்பத்தியில் 90 சதவிகிதம் கோவை பகுதியில் பெறப்படுகிறது. பிற பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் உதிரி பாகங்கள் செல்கின்றன.
கிரைண்டர் உற்பத்தியாளர்களுக்காக கோயமுத்தூர் வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கம்  செயல்பட்டு வருகிறது. இலவச கிரைண்டர் திட்டத்துக்கு ஆர்டர்களைப் பெறுவதற்காக கிரைண்டர் உற்பத்தியாளர்கள் "கெயூமா கிரைண்டர் கூட்டமைப்பு' என்ற அமைப்பைத் துவக்கியுள்ளனர்.


இந்த அமைப்பின் முதல் கூட்டம், ஆவாரம்பாளையம் கோ-இண்டியா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி.பி.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். 



கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் சண்முகசுந்தரம் கூறியது:

நாட்டின் கிரைண்டர் உற்பத்தியில் 90 சதவிகிதம் கோவையில்தான் உள்ளது. தமிழக அரசின் இலவச கிரைண்டர் திட்டத்துக்கு 1.5 கோடி கிரைண்டர்கள் தேவைப்படும் என்று தெரிகிறது.
இதில் 30-லிருந்து 40 சதவீதம் தான் கோவையில் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பாக இணைந்து செயல்படுவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

இதைக் கருத்தில்கொண்டு கோவையில் உள்ள வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்களைக் கொண்ட கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கிரைண்டர்களுக்கான ஆர்டர்களைப் பெற ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் பட்சத்தில் அதில் பங்கேற்பதற்காக, கூட்டமைப்பை பொது நிறுவனமாகப் பதிவு செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

வீட்டு உபயோகப் பொருள்களில் கிரைண்டர் மட்டுமே, இந்தியாவின் பிறப்பிடமாக உள்ளது. மேலும் வெட்கிரைண்டர் உற்பத்தியில் கோவைக்கு தனியிடம் உள்ளது. ஆகவே, அரசின் திட்டத்தில் கோவையில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

புதிய கூட்டமைப்பில் கோவையில் உள்ள அனைத்து கிரைண்டர் உற்பத்தியாளர்களும் சேர வேண்டும். புதிய அரசுக்கு வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக