ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏழைகளுக்கு இலவச அரிசி: கலைஞர் போயி அம்மா போட்டோ டும் டும் டும்


ஏழைகளுக்கு இலவச அரிசி: 
ஆடம்பரம் இல்லாத எளிமையான அரசு விழாமுதல்-அமைச்சர் ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றபின், முதல் விழாவாக இலவச அரிசி வழங்கும் விழா இன்று நடந்தது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் கூட்டுறவு ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
 
இந்த விழா ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்தது. இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட ரேஷன் கடை முன்பு சிறிய பந்தல் மட்டுமே போடப்பட்டிருந்தது. கடை முன்பு மட்டுமே தாழ்வான சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரமாண்ட பேனர், பந்தல், மேடை அலங்காரம் எதுவும் இல்லை.
 
மிகவும் எளிமையாக நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இலவச அரிசியை ஏழை பெண்களுக்கு வழங்கினார்.இது போல மாவட்டங்களிலும் இலவச அரிசி வழங்கும் விழா எளிமையாக நடந்தது. சில இடங்களில் துணி பந்தல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றையும் அகற்றி விட்டனர்.
 
அனைத்து ரேஷன் கடைகளிலும் வழக்கம் போல் இன்று அரிசி வழங்கப்பட்டது. இலவசமாக கிடைத்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். விழாவாக நடத்தப்படவில்லை. அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் யாரும் பங்கேற்க வில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக