ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 5 பேர் இன்று அதிகாலையில் கைது


 வேலூர் மாவட்டத்தில் நிலபேர விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெ பேரவை நிர்வாகி ஜானகிராமன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 5 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் 6 பேரும் காவலில் வைக்கப்பட்டனர்.

முன்னதாக, வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் பெயரை தவறாகப் பயன்படுத்திய புகாரைத் தொடர்ந்து ஐந்து பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
அமைச்சருக்கு நெருக்கமாக இருப்பது போல காட்டிக் கொண்டு, மாவட்ட அதிகாரிகளிடம் தங்கள் பணிகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. அமைச்சர் விஜய் தலைமையில் கடந்த வாரம் நடந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்திலும், கட்சி அமைப்பைச் சேர்ந்த சிலர் அவ்வப்போது தலையிட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் இருந்தும் முதல்வர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அமைச்சர் விஜயை திங்கள்கிழமை முதல்வர் அழைத்துப் பேசியதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து ஐந்து பேரை நீக்குவதாக முதல்வர் நேற்று அறிவித்தார்.
அவர்கள்: வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜி.ஜி. ரவி, சத்துவாச்சாரி நகர கவுன்சிலர் பாட்சி (எ) ஜெய்சங்கர், வி.ஜி. துளசிராமன், ஜெ. சுரேந்திரன், வி.ஆர். நித்யகுமார் ஆகிய ஐவர்.
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதில் சிலர் ஏற்கெனவே காவல் துறை நடவடிக்கைகளுக்கு உள்ளானவர்கள் என்பதால், இவர்களின் தலையீடு குறித்து அதிகாரிகள் அதிருப்தி அடைந்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக