ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினி அரசியலை விட்டது போல் வடிவேலு அவர்களே., நீங்களும் விட்டுவிடுங்கள்,

சினிமா உலகில் உள்ள எந்த மனிதர்களையும் தனிப்பட்ட முறையில் 'கதாநாயகனாக' ஏற்று கொண்டது கிடையாது.( இருபது வயதுக்கு அப்புறம்தான் இப்படியெல்லாம், அதற்க்கு முன் நெறய ஹீரோக்கள் இருந்தார்கள்). ஆனால் வடிவேலுவின் தீவிர விசிறி என்று சொல்லிகொள்வதில் எனக்கு எந்த சங்கடங்களும் இருந்ததில்லை.


அப்படி பிடிக்க என்னதான் காரணம்? -

சரியாக சொல்லவேண்டுமென்றால் பெண்களை வைத்து காமெடி செய்வதை நான் ரசிப்பது கிடையாது., கவுண்டமணி மற்றும் பலர்., ஐந்தில் மூன்று காமெடிகளை., பெண்களை வைத்துகொண்டு ( உதாரணம் -ஷர்மிலியுடன் நடித்த ஏகப்பட்ட காமெடி) செய்வார்கள். கவுண்டரின் டைமிங் சென்சுதான் அடியேனுக்கு ரொம்ப பிடித்தது., உதாரணம் - "ராம்சாமின்குற பேருக்கெல்லாம் நான் சய்கில் தர்றதில்ல"

வடிவேலு உள்ள நுழைந்த பிறகு அவரும் ( கூட ) அப்படி போன்ற கோக்கு மாக்கு காமடி தான் செய்தார்., பத்தோடு பதினொன்று என்பதாகத்தான் அடியேனும் ரசித்தேன். வெற்றி கொடி கட்டு என்ற படம் வந்த பொழுதுதான் சற்று வித்தியாசம் வந்ததாக நினைக்கிறேன் ( பாரதிகண்ணமாவில்கூட பெண்களை வைத்து ஒரு காமெடி வரும் , அதுவும் இரட்டை அர்த்தத்தில் ) அன்றில் இருந்து சற்று எல்லோராலும் கவனிக்க பட்டார்! அதன் பின் வின்னர் என்ற படத்தில் அவருக்கென்று சரியான பாணி காமெடி செட்டாகியது. அங்கேதான்., அதன் பின் அவரது வளர்ச்சியை பற்றி நான் சொல்லி தெரிவதில்லை, இன்னும் வரைக்கும் பில்-டப் காமெடி சலிக்கவில்லை ( இப்பொழுது விவேக்கும் அப்படி அடி வாங்கி காமெடி பண்ணுறார்!)

மிகவும் கவனித்ததில் வடிவேலுவின் பாடி-லாங்குவேஜ் வேறு எந்த நடிகரிடமும் நான் பார்த்ததில்லை.



மிகவும் ரசித்த காமெடி படங்கள்/சீன்கள்

வெற்றிக்கொடி கட்டு பல சீன்கள்
பிரண்ட்ஸ் படத்தில் பல காட்சிகள்
வின்னர் படத்தில் முழுவதும்
இம்சை அரசன் போர்சன் முழுவதும்
சந்திரமுகி படத்தில் அந்த பங்களா உள்ளே நுழையும் சீன் ( சான்சே இல்லை அந்த மாதிரியான ஒரு உடல் மொழி)

சில படங்களில் ஓரிரு சீன்கள் மூலம் செமையா காமடி அமைந்திருக்கும்., "லேடன் கிட்ட பெசுறீயா" ( பார்க்க மேலே வீடியோ) என்று வம்பிளுப்பாரே அது, "தம்பி இன்னும் டி வரலே, வட போச்சே " இது., அப்புறம் "என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்கம்மா" போன்ற இன்னும் பல இருக்கு , அது எல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும்!

இப்ப மேட்டர்!

ஒரு முறை கருணாநிதியே சொன்னதாக படித்த ஞாபகம்,, " நான் கூப்பிட்டால் கூட நீங்கள் அரசியலுக்கு வரகூடாது" என்பதாக., அதேதான் எனது மனநிலையும், வடிவேலு எந்த கட்சியிலும் இணைந்திருக்க கூடாது. இணைந்ததில் என்னை போன்ற பல உண்மை ரசிகர்களுக்கு மிக வருத்தமே.

இதனை அப்பவே ( கட்சியில் சேர்ந்தவுடன் ) எழுதி வைத்து விட்டேன், வெற்றி பெற்றுவிட்டால் இன்னும் சில வார்த்தைகள் சேர்த்து எழுதலாமே என்று வைத்துருந்தேன், அதற்க்கு அவசியமில்லாமல் போய்விட்டது. ரஜினி அரசியலை விட்டது போல் வடிவேலு அவர்களே., நீங்களும் விட்டுவிடுங்கள், எனக்கு பிடித்த மிக சில சினிமா துறையினரில் நீங்கள் மிகவும் எனக்கு பிடித்தவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக