:இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த 10 இலங்கை மீனவர்களை கிழக்கு கடலோர காவல்படை கைதுசெய்தது. அவர்களிடம் இருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டன.


காகிநாடாவுக்கு 120 கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடலோர காவல்படை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
2 படகுகளிலும் 5 ஆயிரம் கிலோ மீன்கள் இருந்தன. அந்த படகுகள் போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக காகிநாடா துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.
2011-ல் இலங்கை மீனவர்கள் இவ்வாறு இந்திய கடல் எல்லைக்குள் வந்து பிடிபடுவது இது 8-வது முறையாகும்.
இதுவரை 17 படகுகள் 84 நபர்கள் மற்றும் 18 ஆயிரத்து 900 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக