
இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழர்களை நேரில் சந்தித்து உரையாட தங்கள் நாட்டுக்கு வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்க இலங்கை அரசு முடிவுசெய்துள்ளதாக அந்த நாட்டின் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் யுத்தம் நிலவிய பிரதேசங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டறியவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சந்தர்ப்பம் அளிக்க இலங்கை அரசு உத்தேசித்துள்ளது.
அதன் மூலம் இலங்கை அரசு தொடர்பான ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வுகள் குறையும் என அந்த நாடு எதிர்பார்க்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை திரும்ப இலங்கைக்கு வரவழைப்பதற்கும் தமிழக அரசின் ஒப்புதலைப் பெறவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக