ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தண்ணீர் தட்டுப்பாடு: 8 அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு


தூத்துக்குடி அரசு மருத்துவமனை தற்போது மாவட்ட மருத்துவ மனையிலிருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களும் தனியார் மருத்துவ மனையின் கட்டணத்திற்குப் பயந்து அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.


தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. தற்போது, 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம் துணை முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

புதிய கட்டிடத்திலும் எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பேறுகால மருத்துத்திற்கு இங்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைக்குத் தினசரி 3லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. ஆனால், மாநகராட்சி மூலம் தற்போது 20ஆயிரம் லிட்டம் தண்ணீரே வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு எவ்வித குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால், நோயாளிகள் அறை, கழிவறைகள் என எதிலும் தண்ணீர் இல்லை. குறிப்பாக பேறுகால வார்டில் குடிநீர் இல்லாத காரணத்தினால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுகுறித்து பெண்கள் பலமுறை போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக புதிய கிணறு தோண்டுவதற்கான பூமிபூஜையுடன் திட்டம் துவங்கப்பட்டது. அந்தக் கிணறு அமைக்கப்பட்டாலும் 5ஆயிரம் லிட்டர் தண்ணீர்தான் வரும். அது போதுமானதாக இருக்காது. மருத்துவமனையில், கடுமையான தண்ணீர் தட்டுபாடு நிலவினாலும், அங்குள்ள கேன்டீனில் தாராளமாக தண்ணீர் புழங்குகிறது. உயிர் காக்கும் சிகிச்சைக்குக் கிடைக்காத தண்ணீர் இவர்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என்பது பொதுமக்களின் கேள்வி.

இந்நிலையில், பேறுகால வார்டில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 8 பேறுகால அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சனை காரணமாக தனது மகளின் பேறுகாலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஒரு பெண் அச்சத்துடன் தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரும் பதிலளிக்க முன்வரவில்லை. அரசு மருத்துவமனை தண்ணீர் பிரச்சனை குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் கேட்டபோது, "தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குத் தற்போது லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் யாருமே என்னிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் உடனடியாக தண்ணீர் சப்ளை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக