ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

திமுக காங். உடன்பாடு: 4 நாள் பரபரப்பு அடங்கியது

சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் நிபந்தனைகள் விதித்து திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்ததால், மத்திய அரசில் இருந்து திமுக விலகுவது என, முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.



அதன்படி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், இணை அமைச்சர்கள் ஜெகத் ரட்சகன், நெப்போலியன், காந்தி செல்வன், பழனி மாணிக்கம் ஆகியோர் டெல்லி சென்றனர்.
திமுகவின் முடிவை அறிந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல் அமைச்சர் கருணாநிதியுடன் திங்கள்கிழமை (07.03.2011) மதியம் 1 மணி அளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மத்திய அரசில் இருந்து விலகுவதாக திமுக எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள திமுக மத்திய அமைச்சர்களுடனும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனும் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து அன்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாநிதியுடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறார். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சி  மேலும் ஒருநாள் அவகாசம் கேட்டுள்ளது. எனவே திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றார்.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக காங்கிரஸ் உறவில் இதுவரை முறிவு ஏற்படவில்லை. திமுக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என்றார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திங்கள்கிழமை இரவு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்திதுப் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் தரப்பில் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற்றிருந்தனர். இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக காங்கிரஸ் தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்கிழமையும் ன இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.
பின்னர் செவ்வாய்கிழமை இரவு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக காங்கிரஸ் கூட்டணி ஒற்றுமையுடன் இணைந்து செயல்படும். திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார்.
அப்போது மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தமிழகத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 63 தொகுதிகள் எவை எவை என்பது பேசி முடிவெடுக்கப்படும். திமுக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து தொகுதிகளை தீர்மானிப்பர். தேர்தல் வெற்றிக்கு வழிகளை வகுப்பதே அடுத்த கட்ட நடவடிக்கை என்றார்.
இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி,
இது மகிழ்ச்சியான நாள். திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் ஏற்பட்ட உடன்பாட்டில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த எண்ணிக்கை என்பது பற்றி அறிய விரும்புபவர்களுக்கு வசதியாக, திமுகவுக்கு 121 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள், பாமகவுக்கு 31 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதியும் வகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பாமக 31 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாசை நாங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்களும் 31 இடத்திலே ஒரு இடத்தை விட்டுத் தந்தனர். இதேபோல் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அவர்களும் ஒரு இடத்தை விட்டு தந்தனர்.

திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்திட தோழமை கட்சிகள் அனைத்தும் நட்போடும், நேசத்தோடும், விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மையோடும் நடந்துகொண்டன. இந்த கூட்டணிக்கு மேலும் பல கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக