புதுடெல்லி: உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஸ்மார்ட் போன் ‘பிளாக்பெரி’. பிஇஎஸ் (பிளாக்பெரி என்டர்பிரைஸ் சர்வீஸ்) என்ற பெயரில் பல சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பிளாக்பெரி போன் வைத்துள்ளனர்.
பிளாக்பெரியின் பிரத்யேக சாப்ட்வேர் மூலமாக பரிமாறப்படும் தகவல்கள் புரிந்துகொள்ள முடியாதபடி சங்கேத குறியீடுகளாக இருப்பதாகவும் தீவிரவாதிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை கூறியது. இத்தகவல்களை இடைமறிக்கும் அனுமதியை தருமாறு மத்திய தொலைதொடர்பு துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிளாக்பெரி நிறுவனம் மறுத்து வருகிறது.
இந்நிலையில், பிளாக்பெரி வாடிக்கையாளர்களுக்கு பிஇஎஸ் சேவை அளித்து வரும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், பார்தி, வோடபோன், ரிலையன்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் இதுபற்றி வரும் 31ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தொலைதொடர்பு துறை கூறியுள்ளது. பிஇஎஸ் சேவை வழியாக பரிமாறப்படும் மெசேஜ்களை மத்திய அரசு இடைமறிக்க எப்போது அனுமதி அளிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்துமாறு கூறப்பட்டுள்ளது. சேவை தொடர அனுமதி அளிக்கப்படுமா என்று அதன் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தொலைதொடர்பு துறை கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக