ஈரானில் Bushehr Nuclear Power Plant அருகே நிலநடுக்கம், முப்பது பேர் பலி 800 பேர் காயம்
6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இது வரை 30 பேர் பலியாகியதாகவும் 800 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலைக்கு எந்த பிரச்சினையும் இது வரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அணு உலைகளை கட்டியது ரஷ்ய நிறுவனம் ஆகும், இதே Atomstroyexport என்ற ரஷ்ய நிறுவனம்தான் கூடங்குளத்தில் அணு உலைகளை கட்டியுள்ளது.
ஈரானில் உள்ள அணு உலை மட்டுமே உலகின் எந்த அணு உலை பாதுகாப்பு அளவீடுகளை கடைபிடிக்கவில்லை என்று ஏற்கனவே பிற நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக