புனித ரமழானை முன்னிட்டு அம்மாதம் முழுவதும் விஷேட யூடியூப் சேனல்களை நேரடி ஒளிபரப்பிற்கென உருவாக்கியுள்ளது கூகிள் நிறுவனம்.
http://www.youtube.com/MakkahLive என்ற இணைப்பில் மக்காவில் நடைபெறும் பிரார்த்தனைகள் தினமும் நேரடியாக ஒளிபரப்பபடுகின்றது.
புனித மாதம் முழுவதும் அதிகாலை தொழுகை மற்றும் சூரியன் மறையும் நேரங்களை அறிந்துகொள்ளமுடிகின்றது.
http://www.youtube.com/ramadan என்ற முகவரியில் இயங்கும் மற்றுமொரு சேனலில் சமயம் சார்ந்த நிகழ்வுகளை பார்வையிட முடிகின்றது.
இவற்றைவிட கூகிள் ப்ளஸ் மூலம் இந்நிகழ்வுகள் சார்ந்த 30 இற்கும் மேற்பட்ட Hang Out களை செய்வதற்கும் ஏற்பாடாகியுள்ளது.
ரமழான் சார்ந்த சமய நிகழ்வுகளுக்காக சமூக தளங்களில் இம்முறையே கூகிளால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக