ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிஷ்யை ஆர்த்தி ராவ் குற்றச்சாட்டை மறுத்த நித்தியானந்தா. புகைப்பட ஆதாரத்துடன் சிக்கியது நித்தியின் திரு விளையாடல்கள். (பட இணைப்பு)


ஆர்த்தி ராவ் எனும் பெண் சில நாட்களிற்கு முன்பு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, “சுவர்ணா டிவி’யில், தன்னை நித்தியானந்தா பலமுறை பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்தியதாக பரபரப்பாக பேட்டி அளித்தார்.
இந்த செய்தி பற்றி மதுரையில் வைத்து பதிலளித்த நித்தி கூறுகையில்:
அந்தப் பெண்ணுக்கு எச்சில் மூலம் பரவும் “ஹெர்பிஸ் 2′ என்ற பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருடன் தான் பாலியல் உறவு கொண்டிருந்தால் தனக்கும் அந்த நோய் வந்திருக்குமே என, கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆர்த்தி ராவின் குற்றச்சாட்டை அடுத்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை, சில கர்நாடக அமைப்புகள், கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், பிடதி ஆசிரமத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நித்யானந்தா சீடர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
நித்யானந்தா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நித்யானந்தாவின் குற்றச்சாட்டிற்கு, ஆர்த்தி ராவ் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர்,  ‘’நித்யானந்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது ஆசிரமத்திற்கு எப்போதாவது வந்து செல்லும் சாதாரண பக்தை அல்ல நான். 2005ல் அவர் முதன் முதலாக ஒரு குழுவுக்கு, “ஆனந்த ஸ்புரணா தியானம்’ என்ற முதல் நிலை தியானப் பயிற்சியை தானே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்.
இந்தக் குழுவினர் தான் ஆசாரியர்கள் என பெயர் சூட்டப்பட்டு, 2005 முதல் இவர்கள், மற்றவர்களுக்கு ஆனந்த ஸ்புரணா தியானத்தை கற்றுக் கொடுக்கத் துவங்கினர்.
இந்த குழுவில் நானும், என் தந்தையும் இடம் பெற்றிருந்தோம். இந்தக் குழு நித்யானந்தாவுக்கு மிகவும் நெருக்கமானது. இதற்கான ஆதாரமாக என்னிடம் சில புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்தப்புகைப்படம்.
அதில் கீழே உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து மூன்றாவதாக நான் இருக்கிறேன். கடைசியாக என் தந்தை இருக்கிறார்.  இதில் இருந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் சாதாரண பக்தைகள் வரிசையில் நான் இல்லை என்பதையும், அவரது மிக முக்கியமான குழுவில் நான் இடம் பெற்றுள்ளேன் என்பதையும் சாதாரண மனிதர் கூட புரிந்து கொள்ள முடியும்’’என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக