ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 17 பேர் தலை துண்டிக்கப்பட்ட பரப்பு சம்பவம். தலிபான் தீவிரவாதிகள் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இதுதானா?


ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை அமெரிக்க ராணுவம் வேட்டையாடி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் பல்வேறு வகைகளில் அமெரிக்காவுக்கு உதவிகள் செய்து வருகிறது.
இதனால் பாகிஸ்தான் மீது தலிபான் தீவிரவாதிகள் கடுமையான கோபத்தில் உள்ளனர். அமெரிக்காவுக்கு உதவி செய்யாதீர்கள் என்று பாகிஸ்தான் அரசை தலிபான்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் சர்வதேச அழுத்தம் காரணமாக அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி செய்து வருகிறது.

இதனால் கோபம் அடைந்துள்ள தலிபான்கள் பாகிஸ்தானில் நாசவேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாவட்டமான திர் மாவட்டத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் ஊடுருவினார்கள். அங்குள்ள ஒரு சோதனைச் சாவடியை தாக்கினர்கள். அந்த சோதனை சாவடியில் பாதுகாப்புக்கு இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 17பேரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. பாகிஸ்தான் வீரர்களை மிரட்டி விட்டு விடுவித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 17பாகிஸ்தான் வீரர்களையும் தலிபான்கள் ஈவு இரக்கமின்றி தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
17 ராணுவ வீரர்களும் தலை துண்டிக்கப்படும் கொடூர வீடியோ காட்சிகளை நேற்று தலிபான் தீவிரவாதிகள் வெளியிட்டனர். தலிபான் இயக்கத்தில் உள்ள தெரீக்-ஈ-தலிபான் என்ற பிரிவு இந்த தலை துண்டிப்புக்கு பொறுப்பு ஏற்றுள்ளது.
தலிபான்கள் வெளியிட்ட அந்த வீடியோ தொடக்கத்தில் பாகிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கத் தலைவர் ஹகிமுல்லா மசூத் பேசுகிறார். அவர் பேசுகையில், கடவுள் எங்களுக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளார். பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவுக்கு உதவி செய்வதை நிறுத்தும் வரை இத்தகைய போர் தொடரும் என்று கூறியுள்ளார்.
தலிபான்களின் இந்த மிரட்டல் பாகிஸ்தான் தலைவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இது சம்பந்தமாக தாலிபன் வெளியிட்ட வீடியோ பல இணைய தளங்களில் தடைசெய்யப்பட்டு இருந்தாலும் Pakistani Taliban release video of beheaded Pakistani soldiers என்ற தலைப்பில் ஒரு இணையத்தில் நாம் தேடிய வீடியோ உங்கள் பார்வைக்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக