காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.7 அலகுகளாப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பக்லான் மாகாணத்தில் புர்கா மாவட்டத்தில் உள்ள சாயி ஹசாரா என்ற மலை கிராமம் மண்ணுக்குள் புதைந்தது.
ஒரு கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போனதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதேபோல் 5 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு கிடப்பதாகக் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக