ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தூக்கத்தை கெடுத்ததால் 14வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய பெண்


மாஸ்கோ : ரஷ்யாவை சேர்ந்தவர் எகத்ரினா மார்கோவ்கினா. மாடல் அழகி (27). ரஷ்யாவின் நிஸ்னி நொவ்கோராட் நகரில் வசிக்கிறார். அடுக்குமாடி குடியிருப்பின் 14வதுமாடியில் இவரது வீடு உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது 4 வயது ஆண் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது 14வது மாடியில் இருந்து தனது குழந்தையை எகத்ரினா வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. தூக்கத்தை கெடுத்ததால் குழந்தையை வெளியில் வீசிவிட்டு மீண்டும் தூங்க சென்றுவிட்டேன் என்று அவர் சாதாரணமாக கூறியிருக்கிறார்

. அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக