ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னை விமான நிலையத்திற்கு புதிய கார் பார்கிங் அதி பாதாளத்தில்!



சென்னை விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், விமான நிலையத்திற்கு எதிரே, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தில், மல்டிலெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.



சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மல்டி லெவல் கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ் ஒன்றும் அமைக்க திட்டமிடப்பட்டது. புதிய கார் பார்க்கிங் காம்ப்ளக்ஸ், மொத்தம், 56283 சதுர மீட்டர் பரப்பளவில், மூன்று அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த வளாகத்தில், ஒரே நேரத்தில், 1338 கார்களை பார்க்கிங் செய்ய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகம் அமைக்க, போதிய இடம் இல்லை. எனவே தற்காலிகமாக அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.


சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்து, அனைத்து முனையங்களும் பயன்பாட்டிற்கு வரும்போது, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு, விமான நிலைய ஆணையம், புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.


தற்போதுள்ள விமான நிலையத்திற்கு எதிரே பாதுகாப்பு துறைக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. அதில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வளாகத்திற்கு தேவையான நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்று, அங்கு கார் பார்க்கிங் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் பேசும்போது "விமான நிலையத்திற்கு எதிரே உள்ள பாதுகாப்புத் துறை நிலத்தில், மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு குத்தகையின் அடிப்படையில் நிலத்தை பெற்று திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான நடவடிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் பேசி எடுக்க வேண்டும். இந்த ஏற்பாட்டிற்கு தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக