ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காமன் வெல்த்போட்டி வாய்ப்பு பறிபோனது – சிறிலங்காவுக்கு பெரும் அதிர்ச்சி

2018ம் ஆண்டில் கொமன்வெல்த் போட்டிகளை அம்பாந்தோட்டையில் நடத்தும் சிறிலங்காவின் கனவு தகர்ந்து போயுள்ளது.
கரிபியன் தீவான சென்.கிற்ஸ் அன் நெவிசில் உள்ள கொமன்வெல்த் விளையாட்டு சம்மேளத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகருடன் போட்டியிட்ட அம்பாந்தோட்டை படுதோல்வி அடைந்தது. 

கோல்ட்கோஸ்ட் நகருக்கு ஆதரவாக 43 வாக்குகள் கிடைத்தன. அம்பாந்தோட்டைக்கு ஆதரவாக 27 வாக்குகளே கிடைத்தன.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரமான கோல்ட்கோஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்டது.

அதேவேளை, முப்பதாண்டு காலப்போரினால் சீரழிந்த சிறிலங்காவினதும், சுனாமியால் பாதிக்கப்பட்ட- பின்தங்கிய மாவட்டமான அம்பாந்தோட்டையினதும் வாழ்க்கையை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்புத் தருமாறு சிறிலங்கா கேட்டு வந்தது.

அம்பாந்தோட்டையில் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமமே, மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரின் தலைமையில் நாமல் ராஜபக்ச, அனார்க்கலி ஆகர்ஸா, முத்தையா முரளிதரன், அரவிந்த டி சில்வா உள்ளிட்ட 60 பேர் கொண்ட பெரியதொரு அணி தனி விமானத்தில் சென்.கிற்ஸ் அன் நெவிஸ் தீவுக்குச் சென்றிருந்தது.

இந்தப் பெரிய அணியை ஏற்றிக் கொண்டு சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் வரலாற்றில் முதல்முறையாக 23 மணிநேர நெடும் பயணத்தை சென்.கிற்ஸ் அன் நெவிசுக்கு மேற்கொண்டிருந்தது.

அங்கு சிறிலங்கா அணியினர் இரவு விருந்துகள், கலை நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகளின் மூலம் பரப்புரைகள் செய்து அம்பாந்தோட்டைக்கு ஆதரவு பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

நேற்று இரு நாடுகளும் தலா 28 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், ஏனைய 14 நாடுகளே வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் பலமாக நம்பியிருந்தது.

பேர்த் கொமன்வெல்த் மாநாட்டில் போர்க்குற்றச்சாட்டுகளை தனது தந்தையார் முறியடித்து விட்டதால், இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு போர்க்குற்றச்சாட்டுகள் தடையாக அமையாது என்று சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், நேற்றைய வாக்கெடுப்பில் சிறிலங்கா 16 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக